அனுபவம் தேவையில்லை.. சென்னை எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் வேலை ரெடி.. ஜூன் 29ல் இண்டர்வியூ

  • சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு டிகிரி முடித்து அனுபவம் இல்லாதவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் ஜூன் 29ம் தேதி நடக்கும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.

    Advertisement

    எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் International Voice Process (Healthcare Voice - Fresher) பிரிவில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

    Advertisement

    இந்த பணிக்கு யாரெல்லாம் விண்ணப்பம் செய்யலாம்? என்னென்ன தகுதிகள் வேண்டும்? என்பது பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம். அதன் விவரம் வருமாறு:

    இந்த பணிக்கு கலை மற்றும் அறிவியல் பிரிவில் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருந்தால் போதும். 2026ம் ஆண்டில் கல்லூரி படிப்பை முடித்து ரிசல்ட் வெளியானவர்களும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம். அதேவேளையில் பிசிஏ, பிடெக் இன்பர்மேஷன் டெக்னாலஜி, எம்சிஏ, பிஇ படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பம்செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது Fresher-க்கான பணியாகும். இதனால் முன்அனுபவம் தேவையில்லை. அதேவேளையில் சில முக்கிய தகுதிகள் இருக்க வேண்டும். அதன்படி ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். இ-மெயில் மற்றும் சாட் சப்போர்ட் வழங்க தெரிந்திருக்க வேண்டும்.
    கஸ்டமர்களின் பிரச்சனைகளுக்கு சொல்யூஷன் வழங்க தயாராக இருக்க வேண்டும்.

    Advertisement

    தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம், திறமை அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இந்த பணிக்கான இண்டர்வியூ ஜூன் 29ம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் HCL Tech - Tower 4, Special Economic Zone Elcto - Sez, Medavakkam High Road, Sholinganallur, Chennai 600 119 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள லிங்கை கிளிக் செய்து ரிஜிஸ்டர் செய்து இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.

    Advertisement

    பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

    English Summary

    HCL IT Jobs 2026: HCL walk in drive interview for Fresher International Healthcare Voice process roles on June 29. Selected candidates will be appointed in Chennai.