நாளை - நாளை மறுநாள் இண்டர்வியூ.. சென்னை எச்சிஎல் நிறுவனத்திலேயே சூப்பர் வேலைவாய்ப்பு!


  • சென்னை: சென்னை சோழிங்கநல்லூரில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் நாளை காலை (ஜுலை 17) மற்றும் நாளை மறுநாள் (ஜுலை 18) என 2 நாட்கள் இண்டர்வியூ நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.

    Advertisement

    சென்னை எச்சிஎல் நிறுவவனத்தில் தற்போது லைப் இன்சூரன்ஸ், Annuities, குரூப் பெனிபிட்ஸ், Individual Insurance Products உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    Advertisement

    இந்த பணிக்கு குறைந்தபட்சம் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் ஓராண்டு முதல் 3 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

    இன்சூரன்ஸ் ப்ராசஸ் பற்றி நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். இன்சூரன்ஸ் பாலிசி லைப் சைக்கிள் மேனேஜ்மென்ட் தெரிந்திருக்க வேண்டும். அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ், ஆங்கிலத்தில் சரளமாக பேசும் திறமை இருக்க வேண்டும். பிரச்சனைகளை தீர்க்கும் திறன் இருப்பதோடு, கமிட்மெண்ட்டில் கவனம் செலுத்தி பணியாற்ற தெரிந்திருக்க வேண்டும்.

    ஷிப்ட் என்பது மாலை நேரத்தில் தான் இருக்கும். இதனால் நைட்டைமில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமை அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.

    Advertisement

    இந்த பணிக்கான இண்டர்வியூ ஜுலை 17 (நாளை) மற்றும் ஜுலை 18 (நாளை மறுநாள்) என்று 2 நாட்கள் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் HCL Technologies Ltd, Sez Unit - 2 (Sb2 Buid), Tower 4, Elcot Special Economic Zone, 602/3, Sholinganallur, Shollinganallur- Medavakkam High Road, Chennai 600 119 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.

    இந்த பணிக்கு தேர்வாகும் பட்சத்தில் உடனடியாக சேர தயாராக இருப்பவர்களும், 30 நாட்கள் வரை நோட்டீஸ் பிரியட்டில் இருக்க ரெடியாகஇருப்பவர்களும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

    Advertisement

    பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

    English Summary

    HCL recruitment for life insuranc, annuities, group benefits, individual insurance products roles in Chennai. 1-3 years expereience candidates can apply for this roles. Interview to be held on July 17, 18 in Chennai.