HCL IT Jobs: பெங்களூரில் வேலை ரெடி.. ஆகஸ்ட் 5ம் தேதி ஆன்லைனில் இண்டர்வியூ

  • பெங்களூர்: பெங்களூரில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு முன்அனுபவம் தேவையில்லை. இதற்கான இண்டர்வியூ ஆகஸ்ட் 5ம் தேதி ஆன்லைனில் நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்து ஆன்லைன் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.

    Advertisement

    எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் Semi Voice Process (MM Certification/knowledge Material Master)பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    Advertisement

    இந்த பணிக்கு கலை மற்றும் அறிவியல் பிரிவில் படிப்பை முடித்து எம்எம் சர்ப்பிகேட் அல்லது அதுபற்றி அறிந்து வைத்திருப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

    பட்ட மேற்படிபபு என்றால் 2025ம் ஆண்டில் எம்பிஏ, எம்ஏ, எமஎஸ்சி, 2024 , 2026ல் எம்காம் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். அதேவேளையில் பிடெக், எம்சிஏ, பிஇ, எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, எம்சிஏ உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.

    இது Fresher-க்கான பணியாகும். இதனால் முன்அனுபவம் எதுவும் தேவையில்லை. இருப்பினும் சில முக்கிய தகுதிகள் வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி Vendor Master, Customer Master, Product Master, Pricing Master உள்ளிட்டவை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

    Advertisement

    இதுதவிர ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். டெக்னிக்கல் ஸ்கில்செட் இருக்க வேண்டம். எம்எம் சர்ட்டிபிகேஷன் (மெட்டிரியல் மாஸ்டர்) தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் SAP அறிவு பெற்றிருக்க வேண்டும். தற்போதையஅறிவிப்பில் பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.

    இதற்கான இண்டர்வியூ ஆகஸ்ட் 5ம் தேதி மதியம் 12 மணி முதல் 1 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூ ஆன்லைனில் தான் நடைபெற உள்ளது. இதனால்தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்து இண்டர்வியூவில் பங்கேற்கலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் பெங்களூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர். பெங்களூரில் ஜிகனியில் உள்ள அலுவலகத்தில் பணியாற்றி வேண்டி இருக்கும்.

    Advertisement

    பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

    English Summary

    HCL Hiring for fresher (2024/2025) semi voice process - MM certification/knowledge (Material Master). Virtual interview drive on August 3. Selected candidates will be appointed in Bengaluru.