சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் நிறுவனத்தில் நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை இண்டர்வியூ நடைபெற உள்ளது. இந்த பணிக்கு முன்அனுபவம் தேவையில்லை. தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டுக்கு ரூ.2.50 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
சென்னையில் இயங்கி வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.
அந்த வகையில் தற்போது Process Associate பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்? என்பது பற்றி இங்கு பார்க்கலாம். * இந்த பணிக்கு ஆங்கிலத்தில் நன்றாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். இந்த பணிக்கு குறைந்தபட்சம் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். பிஇ, பிடெக் முடித்தவர்கள் என்றால் விண்ணப்பம் செய்ய வேண்டாம். இது Fresher-க்கான பணியாகும். இதனால் முன்அனுபவம் தேவையில்லை. இதனால் மேற்கண்ட தகுதிகள் இருப்பின் விண்ணப்பம் செய்யலாம். தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் என்பது ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷிப்ட் என்பது ரோட்டேஷனல் முறையில் இருக்கும். இதனால் நைட் ஷிப்ட்டிற்கும் தயாராக இருக்க வேண்டும். அதேபோல், இன்டர்நேஷனல் டிரெய்னர்கள் மூலம் பயிற்சி வழங்கப்படும். இந்த பணிக்கான இண்டர்வியூ நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சென்னையில் நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் HCL Technologies, No 602/3 Elcot Economic Zone, Medavakkam High Road, Sholinganallur, Chennai - 600 119 அலுவலகம் செல்ல வேண்டும். அங்கு தான் இண்டர்வியூ நடைபெற உள்ளது. பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
* நன்றாக கவனிக்கும் திறமை இருக்க வேண்டும்.
* டேட்டா என்ட்ரி மற்றும் டைப்பிங் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும்.
* மல்டிடாஸ்க்கிங் திறமை இருக்க வேண்டும்.
* அனலிட்டிக்கல் மற்றும் பிரச்சனைகளை தீர்க்கும் திறன் இருக்க வேண்டும்.