பெங்களூர்: பெங்களூரில் செயல்பட்டு வரும் எச்சிஎல் நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்பபட உள்ளது. இதற்காக ஆன்லைன் இண்டர்வியூ நாளை நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம்.
எச்சிஎல் நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தற்போயைத அறிவிப்பின்படி வாய்ஸ் புராசஸ் (Voice Process) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது Freshers-க்கான பணியாகும். இதனால் பணி அனுபவம் எதுவும் தேவையில்லை. மாறாக இந்த பணிக்கு ஆர்ட்ஸ் மற்றும் சயின்ஸ் பிரிவில் ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். குறிப்பாக 20024 முதல் 2026ம் ஆண்டுக்குள் கல்லூரி படிப்பை முடித்திருக்க வேண்டும். பிஇ, பிடெக், எம்சிஏ படித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆங்கிலத்தில் சரளமாக எழுதவும், பேசவும் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் இமெயில் மற்றும் சாட் சப்போர்ட் பற்றி தெரிந்திருக்க வேண்டும். கஸ்டமர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்க தெரிந்திருக்க வேண்டும. மேலும் டேட்டா என்டர், அப்டேட் உள்ளிட்டவற்றை பராமரிக்க தெரிந்திருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திறமை அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். இந்த பணிக்கான இண்டர்வியூ நாளை (செப்டம்பர் 26)ம் தேதி ஆன்லைனில் நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள லிங்க் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும். அதன்பிறகு ஆன்லைன் இண்டர்வியூவுக்கான லிங்க் அனுப்பி வைக்கப்படும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் பெங்களூர் ஐடிபிஎல் ஒயிட்பீல்ட் பகுதியில் உள்ள நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here