IDBI Bank: ஐடிபிஐ வங்கியில் அதிகாரி வேலை.. மாதம் ரூ.2 லட்சம் வரை சம்பளம்! டிகிரி தகுதி தான்!

  • சென்னை: ஐடிபிஐ வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 31 எஸ்.ஓ பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.2 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். இது குறித்து விவரங்களை இங்கு காணலாம்.

    Advertisement

    நாட்டின் முன்னணி வங்கிகளில் ஒன்றாக ஐடிபிஐ வங்கி உள்ளது. மத்திய அரசின் பொதுத்துறை காப்பீட்டு கழகமான எல்.ஐ.சி இந்த வங்கியில் பெரும்பான்மையான பங்குகளை வைத்துள்ளது. நாடு முழுக்க சுமார் 20 ஆயிரம் வங்கி கிளைகளுடன் ஐடிபிஐ வங்கி இயங்கி வருகிறது.

    Advertisement

    தற்போது இந்த வங்கியில் 31 ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

    காலிப்பணியிட விவரம்:

    மொத்தம் 31 எஸ் ஓ எனப்படும் ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. தேர்வு செய்யப்படுபவர்கள் நாடு முழுக்க உள்ள ஐடிபிஐ வங்கி கிளைகளில் பணியமர்த்தப்படலாம். இது ஒரு நிரந்தரப் பணியிடமாகும்

    * தகவல் அமைப்பு தணிக்கை கிரேடு C - 4 பணியிடங்கள்
    * தகவல் அமைப்பு தணிக்கை கிரேடு B - 6 பணியிடங்கள்
    * உள்கட்டமைப்பு மேலாண்மைத் துறை - கட்டிட பராமரிப்பு (Premises) கிரேடு D - 5 பணியிடங்கள்
    * உள்கட்டமைப்பு மேலாண்மைத் துறை - கட்டிட பராமரிப்பு (Premises) கிரேடு B - 3 பணியிடங்கள்
    * சட்ட அதிகாரி (Legal) கிரேடு D - 3 பணியிடங்கள்
    * சட்ட அதிகாரி (Legal) கிரேடு B - 6 பணியிடங்கள்
    * பாதுகாப்பு அதிகாரி கிரேடு B - 4 பணியிடங்கள் என மொத்தம் 31 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

    Advertisement

    கல்வித் தகுதி:

    கல்வித் தகுதியை பொறுத்தவரை பணியிடங்களுக்கு தகுந்தபடி மாறுபடும். B.E/B.Tech, LLB, B.Sc, BCA, M.Sc, MCA, M.E/M.Tech போன்ற தகுதிகளைப் பெற்றுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணபிக்க முடியும். கல்வித் தகுதி குறித்த முழு விவரங்களை இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பில் தெரிந்துகொள்ளலாம்.

    வயது வரம்பு:

    வயது வரம்பை பொறுத்தவரை, 01.07.2026 அன்று தேதிப்படி கணக்கில் கொள்ளப்படும். குறைந்தப்படசம் 25 வயது நிரம்பியவர்களும் அதிகபட்சம் 45 வயதுக்கு உட்பட்டவர்களும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். எஸ்சி / எஸ்டி (SC/ST) விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.

    Advertisement

    சம்பளம் எவ்வளவு?

    Grade D - ரூ. 2,04,000/-
    Grade C (Audit - IS) - ரூ. 1,69,000/-
    Grade B (Audit / IMD / Legal / Security) - ரூ. 1,29,000/-

    தேர்வு முறை

    தேர்வு முறையை பொறுத்தவரை, குழு விவாதம், நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    விண்ணப்பக் கட்டணம்

    தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லை மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமும் ஆன்லைனில் செலுத்த வேண்டும். பொதுப்பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.1,050 ஆகும். SC/ST/Ex-Servicemen/PWD விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 250 ஆகும்.

    Advertisement

    விண்ணப்பிப்பது எப்படி?

    ஐடிபிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.idbi.bank.in/ பக்கத்தில் உள்ள 'Careers' பகுதிக்குச் சென்று, ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை முழுமையாகப் பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களைப் பதிவேற்றி தங்கள் கட்டணத்தை செலுத்திச் சமர்ப்பிக்க வேண்டும்.

    ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 14.07.2026 ஆகும். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.07.2026 ஆகும்.

    அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.idbi.bank.in/pdf/careers/Detailed-Advt-of-SCO-2026-27.pdf

    English Summary

    IDBI Bank job Recruitment: IDBI Bank has invited online applications for 31 Specialist Officer posts. Eligible candidates can apply from July 14 to July 26, 2026. Check eligibility, salary, vacancies and application details.