இந்திய ராணுவத்தில் வேலை.. ஆரம்பமே 56 ஆயிரம் சம்பளம்! டிகிரி முடித்தவர்களுக்கு ஜாக்பாட்!

  • சென்னை: இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 76 காலிப்பணியிடங்கள் நிரப்பப் படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும். சம்பளத்தை பொறுத்தவரை ஆரம்பமே மாதம் சம்பளம் ரூ.56 ஆயிரம் வழங்கப்படும். இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கு காணலாம்.

    Advertisement

    இந்திய ராணுவத்தில் சேர்ந்து நாட்டிற்கு சேவையாற்ற வேண்டும் என்பது பல லட்சம் இளைஞர்களின் கனவாக உள்ளது. இதனால் ராணுவத்தில் ஆட்சேர்ப்புக்காக வெளியிடும் தேர்வு அறிவிப்பை ஆர்வத்துடன் காத்திருந்து ஏராளமான இளைஞர்கள் தேர்வுக்காக தயராகி வருகிறார்கள்.

    Advertisement

    இந்திய ராணுவத்தில் ஆட்சேர்ப்பு பணிகளை பொறுத்தவரை அவ்வப்போது தேவைக்கேற்ப காலியிடங்களை நிரப்பி வருகிறது. அந்த வகையில் தற்போது, டிகிரி கல்வி தகுதியுடன் கூடிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

    பணியிடங்கள் விவரம்:

    என்.சி.சி (ஆண்கள்) - 70 பணியிடங்கள்
    என்.சி.சி (பெண்கள்) - 06 பணியிடங்கள்

    கல்வித் தகுதி:

    அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி படித்து இருக்க வேண்டும். என்.சி.சி.-யின் சீனியர் விங்கில் (Senior Division or Wing) குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் சேவையை நிறைவு செய்திருக்க வேண்டும். கல்வித் தகுதி பற்றிய முழு விவரங்களை தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் தேர்வு அறிவிப்பில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

    Advertisement

    வயது வரம்பு:

    19 வயது முதல் 25 வரை வயது உடையவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஜனவரி 1, 2027 தேதியின் படி வயது வரம்பு கணக்கிடப்படும். விண்ணப்பதாரர்கள் 2002 ஜனவரி 2 ஆம் தேதிக்கு முன்பாகவோ, 2008 ஜனவரி 1ஆம் தேதிக்கு பிறகாகவோ பிறந்து இருத்தல் கூடாது.

    சம்பளம் எவ்வளவு?:

    சம்பளத்தை பொறுத்தவரை மத்திய அரசின் ஊதிய கமிஷன் லெவல் 10 படி ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை சம்பளமாக கிடைக்கும்.

    தேர்வு முறை:

    தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு எஸ்.எஸ்.பி நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். விண்ணப்பங்களை வரும் 20.08.2026 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

    Advertisement

    ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய முகவரி: https://www.joinindianarmy.nic.in/

    தேர்வர்கள் விண்ணப்பிக்கும் முன்பாக அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பினை படித்து உறுதிசெய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.joinindianarmy.nic.in/writereaddata/Portal/NotificationPDF/NOTIFICATION_FOR_NCC_SPL_ENTRY_125_MEN_COURSE_APR_2027.pdf

    English Summary

    Indian Army job notification: A recruitment notification has been released by the Indian Army. A total of 76 vacancies are being filled. Candidates who have completed a degree are eligible to apply for these positions. Regarding remuneration, the starting monthly salary is ₹56,000. Details, including how to apply, can be found here.