இந்தியன் வங்கியில் 1,500 பணியிடங்கள்.. தமிழ் மொழி தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை.. டிகிரி தகுதி தான்

  • சென்னை: இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 1,500 பயிற்சி பணியிடங்களை நிரப்பப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் 270 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. டிகிரி முடித்த இளம் பட்டதாரிகள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இது குறித்த முழு விவரங்களை இங்கு பார்க்கலாம்.

    Advertisement

    நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக இந்தியன் வங்கி உள்ளது. சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்தியன் வங்கிக்கு நாடு முழுவதும் வங்கி கிளைகள் உள்ளன. சுமார் 6 ஆயிரம் கிளைகளுடன் இயங்கி வரும் இந்த வங்கியில் பல ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

    Advertisement

    பணியிடங்கள் விவரம்:

    மத்திய அரசின் பொதுத்துறை வங்கி என்பதால் இந்த வங்கியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கை நிறைய சம்பளம், சலுகைகள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இந்தியன் வங்கியில் காலியாக உள்ள அப்ரெண்டீஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது பற்றிய விவரங்கள் பார்க்கலாம்.

    பணியிடங்கள் விவரம்:

    தமிழகத்தில் மட்டும் 270 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதே போன்று உத்தரப் பிரதேசம் - 285, மேற்கு வங்கம் - 145, ஆந்திரப் பிரதேசம் - 85, பீகார் - 80, மகாராஷ்டிரா - 70, மத்தியப் பிரதேசம் - 65, ஜார்க்கண்ட் - 60, தெலங்கானா - 46, கேரளா - 44, ஒடிசா - 42, ராஜஸ்தான் - 40, கர்நாடகா - 35, குஜராத் - 35, ஹரியானா - 32, டெல்லி - 32, அசாம் - 30, உத்தரகாண்ட் - 20, சத்தீஸ்கர் - 10, புதுச்சேரி - 9, இமாச்சலப் பிரதேசம் - 6, ஜம்மு காஷ்மீர் - 3, சண்டிகர் - 2, கோவா - 2, மணிப்பூர் - 2, நாகாலாந்து - 2, மேகாலயா - 1, திரிபுரா - 1, அருணாச்சலப் பிரதேசம் - 1 என மொத்தம் 1500 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

    Advertisement
    தமிழ்நாடு மின்விநியோக கழகத்தில் வேலை.. 500 காலியிடங்கள்! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

    கல்வித் தகுதி:

    அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்து இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். எனினும் 01.04.2022 முதல் 01.11.2026-க்குள் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். உள்ளூர் மொழி தெரிந்த்வர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அதாவது விண்ணப்பிக்கும் மாநிலத்தின் மொழி தெரிந்து இருக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு தமிழ் தெரிந்து இருப்பது அவசியம்.

    வயது வரம்பு:

    01.11.2026 அன்று தேதிப்படி வயது வரம்பு கணக்கிடப்படும். 20 வயது முதல் 28 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்சி/எஸ்டி உள்ளிட்ட பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினர் 31 வயது வரை உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    சம்பளம் எவ்வளவு?

    இந்தப் பணியிடங்கள் நிரந்தர பணியிடங்கள் கிடையாது. ஓராண்டு காலப் பயிற்சிப் பணியாகும். மெட்ரோ/ நகர்புறங்களில் உள்ள வங்கி கிளைகளில் வேலைக்கு அமர்த்தப்படுவோருக்கு ரூ.15,000 சம்பளம் வழங்கப்படும். ஊரகம், மற்றும் சிறுநகரங்களில் ரூ. 12,300 வழங்கப்படும்.

    Post Office Job: தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலை.. மாதம் 63,000 சம்பளம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க

    தேர்வு முறை:

    ஆன்லைன் தேர்வு, உள்ளூர் மொழித்திறன் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைன் எழுத்து தேர்வு தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருநெல்வேலி, சேலம், திருச்சி, வேலூர், கோவை, விருதுநகர், தஞ்சை உள்ளிட்ட நகரங்களில் நடைபெறும்.

    Advertisement

    ஆன்லைன் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் உள்ளூர் மொழித் திறன் தேர்வில் பங்கேற்க வேண்டும். ஏற்கெனவே 8, 10 அல்லது 12 ஆம் வகுப்பில் தமிழ் மொழியைப் படித்ததற்கான மதிப்பெண் சான்றிதழ் வைத்திருப்பவர்கள் இந்த மொழித் தேர்வில் பங்கேற்க வேண்டியதில்லை.

    விண்ணப்பிப்பது எப்படி?

    அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பினை தெரிந்து கொண்ட பிறகு தேர்வர்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்ப கட்டணமாக ரூ.800 செலுத்த வேண்டும். எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு ரூ.175 செலுத்த வேண்டும்.

    ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 05.11.2026 ஆகும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.11.2026 ஆகும்.

    English Summary

    Indian Bank Job: A job notification has been released by Indian Bank. A total of 1,500 trainee positions are to be filled, with 270 of these vacancies located in Tamil Nadu. Young graduates who have completed a degree are eligible to apply for these positions. Read on for full details.