Indian Railways: ரயில்வேயில் வேலை பார்க்க விருப்பமா? 6,565 காலிப்பணியிடங்கள்! யார் யார் விண்ணப்பிக்க முடியும்?

  • சென்னை: இந்தியன் ரயில்வேயில் (Indian Railways) காலியாக உள்ள டெக்னிஷியன் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 6,565 காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன. ஐடிஐ, டிப்ளமோ, பி இ/ பிடெக், பிஎஸ்சி உள்ளிட்ட படிப்புகள் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.29,200 சம்பளம் வழங்கப்படும்.

    Advertisement

    நாட்டின் மிகப்பெரிய அரசு நிறுவனமான இந்தியன் ரயில்வேயில் நாடு முழுவதும் லட்சக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். ரயில்வேயில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு கை நிறைய சம்பளம், குடியிருப்பு, பயண வசதி சலுகைகள் என பல்வேறு சலுகைகள் வழங்கப்படுவதால், நாடு முழுவதும் பல லட்சக்கணக்கான தேர்வர்கள் ரயில்வே வேலைக்கு தயாராகி வருகிறார்கள்.

    Advertisement

    ரயில்வேயை பொறுத்தவரை ஆர்.ஆர்.பி எனப்படும் ரயில்வே தேர்வு வாரியம் உரிய தேர்வுகளை நடத்தி காலிப் பணியிடங்களை நிரப்பப்படுகிறது. அந்த வகையில் தற்போது, ரயில்வேயில் காலியாக உள்ள டெக்னிஷியன் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கான விண்ணப்ப பதிவு நாளை முதல் தொடங்க உள்ளது. மொத்தம் 6,565 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

    காலியிடங்கள் விவரம்:

    டெக்னீஷியன் கிரேடு-I (சிக்னல்) - 323 பணியிடங்கள்
    டெக்னீஷியன் கிரேடு-III - 6,242 பணியிடங்கள்

    கல்வித் தகுதி:

    டெக்னிஷியன் கிரேட் 1 சிக்னல்: இயற்பியல்/எலக்ட்ரானிக்ஸ்/கம்ப்யூட்டர் சயின்ஸ்/ தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் இளங்கலை பட்டம் ( BSC) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அல்லது மேற்கண்ட பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் 3 ஆண்டுகள் பொறியியல் டிப்ளமோ அல்லது மேற்கண்ட அடிப்படைப் பொறியியல் பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் இன்ஜினியரிங் இளங்கலைப் பட்டம் (B.E./B.Tech.) பெற்றிருக்க வேண்டும்.

    Advertisement

    டெக்னிஷியன் கிரேடு III பணி: இந்த பணியிடங்களுக்கு விண்ணபிபிப்பவர்கள் மெட்ரிகுலேஷன் / பத்தாம் வகுப்புடன் ஐடிஐ அல்லது அப்ரெண்டீஸ் டிரெயினிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    வயது வரம்பு:

    வயது வரம்பை பொறுத்தவரை 29.07.2026 தேதிப்படி கணக்கிடப்படும்.
    * டெக்னிஷியன் கிரேட் 1 சிக்னல் பணிக்கு 18 வயது முதல் 33 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
    * டெக்னிஷியன் கிரேட் III பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

    அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகைகள் உண்டு. பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் உச்ச வரம்பில் சலுகை அளிக்கப்படும்.

    Advertisement

    சம்பளம் எவ்வளவு:

    * டெக்னிஷியன் சிக்னல் பணிக்கு மத்திய அரசின் ஊதிய கமிஷன் லெவல் 7 படி ரூ.29,200 அடிப்படை சம்பளமாக வழங்கப்படும்.
    * டெக்னிஷியன் Grade-III - லெவல் 2 படி Rs.19,900/-முதல் வழங்கப்படும்.

    தேர்வு முறை:

    கணிணி வழியிலான தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை என மூன்று கட்ட தேர்வுகளுக்கு பிறகு தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ரயில்வே தேர்வு வாரிய இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

    விண்ணப்ப கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். தேர்வு எழுதிய பிறகு ரூ.400 திருப்பி தரப்படும். எஸ்சி/எஸ்டி, பெண்கள், இபிசி, மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர் ஆகியோருக்கு ரூ.250 கட்டணம் ஆகும். தேர்வு எழுதிய பிறகு முழு கட்டணமும் திருப்பி தரப்படும்.

    Advertisement

    நாளை 30 ஆம் தேதி முதல் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் அடுத்த மாதம் ஜூலை 29 ஆம் தேதியாகும்.

    அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.rrbchennai.gov.in/

    English Summary

    Indian Railways has announced recruitment for 6,565 Technician posts. Candidates with ITI, Diploma, B.E./B.Tech, or B.Sc qualifications are eligible. Online applications begin tomorrow. Selected candidates will receive a monthly salary starting from ₹29,200 under the latest railway recruitment drive.