சென்னை: மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 750 அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிகிரி முடித்தவர்கள் இந்தப் பயிற்சிப் பணிக்கு விண்ணப்பிக்க முடியும்.
நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. நாடு முழுவதும் பல்வேறு கிளைகளுடன் இயங்கி வருகிறது. ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
தற்போது இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள 750 அப்ரெண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கு காணலாம். நாடு முழுவதும் உள்ள ஐஓபி வங்கி கிளைகளில் காலியாக உள்ள 750 பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தமிழகத்தில் மட்டும் 35 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இது அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடம் மட்டுமே. நிரந்தர அரசு வேலை அல்ல. பயிற்சி முடிந்ததும் நிரந்தர பணி வழங்கப்படாது. ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்பு முடிவுகள் 31.07.2026 அல்லது அதற்கு முன் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். 01.03.2022 முதல் 31.07.2026 வரை பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பானது 01.07.2026 அன்று தேதிப்படி கணக்கிடப்படும். குறைந்தபட்சம் 20 வயது நிரம்பியவர்களும், அதிகபட்சம் 28 வயதுக்கு மிகாதவர்களும் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். பணியமர்த்தப்படும் நகரங்களுக்கு ஏற்ப சம்பளமானது வழங்கப்படும். உதாரணமாக பணியமர்த்தப்படும் இடம் மெட்ரோ நகரங்கள் என்றால் மாதம் ரூ.15,500 வழங்கப்படும். இதுவே நகர்ப்புறம் என்றால், ரூ.14,500, கிராமப்புறம் என்றால் ரூ.14,000 சம்பளமாக வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமும் ஆன்லைன் முறையிலேயே கட்ட வேண்டும். பொதுப்பிரிவினர் ஆண்கள் என்றால் ரூ.744 கட்ட வேண்டும். பெண்கள் என்றால் ரூ.708 கட்ட வேண்டும். எஸ்சி / எஸ்டி / PwBD என்றால் ரூ.236 விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். முதலில் NATS அல்லது NAPS தளத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். அதன் பிறகு இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது பணியிடம் ஒரு மாநிலத்தையோ அல்லது யூனியன் பிரதேசத்தை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். பொதுவாக சொந்த மாநிலத்தைத் தேர்வு செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு கடந்த 7 ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 20.07.2026 ஆகும். தேர்வுக்கான அனுமதிச் சீட்டு பின்னர் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம். தேர்வு அறிவிப்பினை படிக்க; https://www.iob.bank.in/documents/d/guest/web-ad-750-vac-2026-27காலிப்பணியிட விவரம்:
கல்வித் தகுதி
வயது வரம்பு
சம்பளம் எவ்வளவு?
தேர்வு முறை
விண்ணப்பக் கட்டணம்
எப்படி விண்ணப்பிப்பது?