சென்னை: இஸ்ரோவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. கிளர்க், ஜூனியர் பெர்சனல் அசிஸ்டண்ட் ஆகிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மொத்தம் 242 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. டிகிரி முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.81 ஆயிரம் வரை வழங்கப்படும்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் தலைமையகம் பெங்களூரில் உள்ளது. விண்வெளி ஆய்வில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா நடுகளுக்கு இணையாக சாதித்து வரக்கூடிய இஸ்ரோவில் வேலை பார்க்க வேண்டும் என்பது பல லட்சக்கணக்கான இளைஞர்களின் லட்சியங்களில் ஒன்றாக உள்ளது.
இஸ்ரோவை பொறுத்தவரை பிரதமர் அலுவலகத்தின் நேரடி பார்வையில் இயங்குகிறது. இஸ்ரோவில் ஏற்படும் காலியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்படுகின்றன. அந்த வகையில், தற்போது காலியாக உள்ள 242 பதவிகளை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது பற்றிய விவரங்கள் வருமாறு:- உதவியாளர்கள் / எழுத்தர், இளநிலை தனி உதவியாளர் / சுருக்கெழுத்தர் பிரிவுகளில் மொத்தம் 242 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. டிவிஷன் கிளர்க் பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்று இருக்க வேண்டும். 60 சதவீத மதிப்பெண்களுக்கு குறையாமல் மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும். கணினி பயன்படுத்தும் திறன் பெற்று இருக்க வேண்டும். ஜூனியர் பெர்சனல் அசிஸ்டண்ட்/ஸ்டெனோகிராபர்: இந்த பணியிடங்களுக்கு ஏதாவது ஒரு பட்டம் பெற்று இருப்பது அவசியம். 60 சதவீத மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும். ஓராண்டு அனுபவம் பெற்றிருப்பது அவசியம் . 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகைகள் உண்டு. பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயது வரம்பில் சலுகை உண்டு. அதாவது மாற்றுத்திறனாளி என்றால் 38 வயது வரை விண்ணப்பிக்கலாம். உதவியாளர் / கிளர்க் - ஊதிய கமிஷன் லெவல் 4 - ரூ.25,500 முதல் 81,100 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு, திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்ப கட்டணமாக ரூ. 500 செலுத்த வேண்டும். பெண்கள் / எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு ரூ. 500 கட்டணம் செலுத்த வேண்டும். தேர்வு எழுதிய பிறகு முழு கட்டணமும் திருப்பித்தரப்படும். விண்ணப்பிக்க கால அவகாசம் தொடங்கும் நாள் 27.07.2026 ஆகும்.பணியிடங்கள் விவரம்;
கல்வித் தகுதி:
வயது வரம்பு:
சம்பளம் எவ்வளவு:
ஜூனியர் அஸ்சிஸ்டண்ட் / ஸ்டெனோகிரபர் - ரூ.25,000 வழங்கப்படும்.தேர்வு முறை:
விண்ணப்பிக்க கடைசி தேதி:
விண்ணப்பிக்க கடைசி நாள் 16.08.2026 ஆகும்.
கூடுதல் விவரங்களுக்கு https://www.isro.gov.in/ என்ற இஸ்ரோவின் இணையதளத்தை பார்வையிடலாம். விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்த பிறகு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.