ISRO job: இஸ்ரோவில் வேலை.. நெல்லையில் பணியிடங்கள்! சூப்பர் சான்ஸ்.. டிகிரி படிச்சிருக்கீங்களா?

  • சென்னை: இஸ்ரோவில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இளநிலை உதவியாளர், எழுத்தர், ஸ்டெனோகிராபர் என பல்வேறு பிரிவுகளில் 242 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. நெல்லையிலும் பணியிடங்கள் உள்ளன. இப்பணியிடங்களுக்கு மாதம் ரூ.25,500 சம்பளம் வழங்கப்படும். டிகிரி முடித்தவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

    Advertisement

    இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. நாட்டிற்கு தேவையான செயற்கை கோள்கள், விண்வெளி ஆய்வுகளில் ஈடுபட்டு வரும் இஸ்ரோ பிரதமர் அலுவலகத்தின் நேரடி பார்வையில் இயங்கி வருகிறது. இஸ்ரோவில் சேர்ந்து விண்வெளித்துறையில் நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என்பது அரசு வேலை கனவுடன் காத்திருக்கும் பல லட்சகணக்கான தேர்வர்களில் விருப்பமாக உள்ளது.

    Advertisement

    இஸ்ரோவை பொறுத்தவரை காலியிடங்களை அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிட்டு நிரப்பி வருகிறது. அந்த வகையில் தற்போது 242 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

    பணியிடங்கள் விவரம்:

    உதவியாளர்கள் (அசிஸ்டண்ட்ஸ்), இளநிலை உதவியாளர், எழுத்தர், தனிப்பட்ட உதவியாளர்கள் என மொத்தம் 242 காலிப்பணியிடங்கள் நிரப்பப் படுகின்றன.

    அகமதாபாத் - 27 பணியிடங்கள்
    பெங்களூர் - 26
    ஹாசன் - 01
    ஹைதராபாத் - 13
    மகேந்திரகிரி (நெல்லை) - 07
    டெல்லி - 01
    ஸ்ரீஹரிகோட்டா - 32
    திருவனந்தபுரம் - 06

    Advertisement

    இளநிலை உதவியாளர்

    அகமதாபாத் - 21
    பெங்களூர் - 19
    ஹாசன் - 02
    ஹைதராபாத் - 02
    மகேந்திரகிரி - 02
    ஸ்ரீஹரிகோட்டா - 14
    திருவனந்தபுரம் - 21

    மேல் பிரிவு எழுத்தர் (upper Division Clerk)

    பெங்களூர் - 22

    ஸ்டெனோகிராபர்

    பெங்களூர் - 10

    தனிப்பட்ட உதவியாளர்கள்

    அகமதாபாத் - 11
    ஸ்ரீஹரிகோட்டா - 03
    திருவனந்தபுரம் - 03

    கல்வித் தகுதி

    உதவியாளர்கள் / டிவிஷன் கிளர்க் பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்து இருக்க வேண்டும். குறைந்தது 60 சதவீத மதிப்பெண்கள் பெற்று இருப்பது அவசியம்.

    ஜூனியர் பெர்சனல் அசிஸ்டண்ட் / ஸ்டெனோகிராபர் பணிக்கு, பட்டப்படிப்புடன், சுருக்கெழுத்து பயிற்சி அவசியம். நிமிடத்துக்கு 60 வார்த்தைகள் எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும். தேர்வர்கள் கல்வித் தகுதி பற்றிய முழு விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பில் பார்க்கலாம்.

    Advertisement

    வயது வரம்பு:

    வயது வரம்பை பொறுத்தவரை 28 வயதுக்குள் இருப்பவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.

    சம்பளம் எவ்வளவு?

    சம்பளத்தை பொறுத்தவரை உதவியாளர், மேல்நிலை எழுத்தர், ஜூனியர் பெர்சனல் உதவியாளர் அல்லது ஸ்டெனோகிராபர் பணிக்கு மாதம் ரூ.25,500 சம்பளம் வழங்கப்படும்.

    தேர்வு முறை:

    எழுத்து தேர்வு, திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைன் மூலமாக இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

    Advertisement

    விண்ணப்பக் கட்டணமாக விண்ணப்பதாரர்கள் ரூ.500 செலுத்த வேண்டும். ஆன்லைனில் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். பொதுப்பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு எழுதிய பிறகு ரூ.400 ரிட்டர்ன் செலுத்தப்படும். எஸ்சி/எஸ்டி, பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முழு தொகையும் ரிட்டன் செய்யப்படும்.

    இப்பணியிடங்களுக்கான விண்ணப்ப பதிவு 27.07.2026 முதல் தொடங்கியுள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 16.08.2026 ஆகும்.

    தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.isro.gov.in/Careers.html

    English Summary

    ISRO job: ISRO has announced job openings. A total of 242 vacancies are being filled across various categories, including Junior Assistant, Clerk, and Stenographer. Positions are available in Nellai as well. The monthly salary for these roles is ₹25,500. Candidates who have completed a degree are eligible to apply.