இஸ்ரோவில் வேலை.. 413 பணியிடங்கள்! டிகிரி, டிப்ளமோ முடிச்சவங்க அப்ளை பண்ணலாம்!

  • பெங்களூர்: மத்திய அரசு நிறுவனமான இஸ்ரோவில் பயிற்சி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. பட்டப்படிப்பு முடித்தவர்களும், டிப்ளமோ முடித்தவர்களுக்கான இந்த பயிற்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மெரிட் லிஸ்ட் அடிப்படையில் நடைபெறுகிறது. எழுத்துத்தேர்வு எதுவும் கிடையாது.

    Advertisement

    இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ பெங்களூரில் உள்ள URSC மையத்தில் அப்ரெண்டீஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 410 பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்கும்? கல்வித் தகுதி என்ன உள்ளிட்ட விவரங்கள பார்க்கலாம்.

    Advertisement

    பணியிடங்கள் விவரம்:

    * பட்டதாரி அப்ரெண்டீஸ் - 220
    * டெக்னிக்கல் அப்ரெண்டீஸ் - 120
    * கமர்ஷியல் அப்ரெண்டீஸ் - 70 என மொத்தம் 410 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

    கல்வித் தகுதி:

    பட்டப்படிப்பு முடித்தவர்களும், டிப்ளமோ முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

    சம்பளம்:

    * பட்டதாரிப் அப்ரெண்டீஸ் - ரூ.12,300
    * டெக்னிக்கல் அப்ரெண்டீஸ் - ரூ.10,900
    * கமர்ஷியல் அப்ரெண்டீஸ் - ரூ.10,900

    விண்ணப்பிப்பது எப்படி?

    தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். NATS இணையதளத்தில் தேவையான விவரங்களை சமர்ப்பித்து பதிவு செய்ய வேண்டும். தேர்வு முறையை பொறுத்தவரை அவர்கள் பெற்ற மதிபெண்கள் அடிப்ப்டையில் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள்.

    Advertisement

    தேர்வர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை படித்து உறுதி செய்த பிறகு விண்ணப்பிக்கலாம். பயிற்சி பணியிடங்கள் என்றாலும் கூட இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றுவதன் மூலம் விண்வெளித்துறையை பற்றிய அனுபவங்கள் கிடக்கும் என்பதால் புதிதாக படித்து முடித்தவர்களுக்கு இது ஒரு அருமையான வாய்ப்பு என்று கல்வியாளர்கள் கூறுகிறார்கள். சம்பள உதவியுடன் கூடிய பயிற்சி என்பதால் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மறாக்காமல் விண்ணப்பியுங்கள்.

    English Summary

    ISRO Jobs: A notification has been released for apprenticeship positions at ISRO, a Central Government organization. Graduates and diploma holders are eligible to apply for these training roles. Selection will be based on a merit list; there is no written examination.