IT Jobs: +2 போதும்.. சென்னை HCL-ல் சூப்பர் வேலை.. ஜுன் 22 முதல் 24 வரை இண்டர்வியூ

  • சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பிளஸ் 2 அல்லது டிகிரி அல்லது பட்ட மேற்படிப்பு முடித்த தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஜுன் 22 முதல் ஜுன் 24ம் தேதி வரை நடைபெறும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.

    Advertisement

    உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு எச்சிஎல் ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதுதவிர நம் நாட்டின் முக்கிய நகரங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது.

    Advertisement

    இந்நிலையில் தான் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் International Voice Process பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

    கல்வி தகுதி என்ன?

    இன்டர்நேஷனல் வாய்ஸ் புராசஸ் பணிக்கு பிளஸ் 2 முடித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம். இல்லாவிட்டால் கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி அல்லது பட்ட மேற்படிப்பை முடித்திருக்க வேண்டும். குறிப்பாக இந்த பிரிவில் குறைந்தபட்சம் ஓராண்டு முதல் 3 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

    Advertisement

    பிற தகுதிகள் என்ன?

    ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். அதேபால் புராடக்ட், சர்வீஸ்கள், டேட்டா மற்றும் கிளைண்ட் அக்கவுண்ட் பற்றி பற்றி தெரிந்திருக்க வேண்டும் பிரச்சனைகளை தீர்க்கும் திறன் இருக்க வேண்டும். மேலும், மல்டி டாஸ்க் திறமை இருக்க வேண்டும். ஷிப்ட் என்பது ரோட்டேஷனல் முறையில் இருக்கும். இதனால் நைட் ஷிப்ட் பார்க்கவும் தயாராக வேண்டும்.

    பணி என்ன?

    பணிக்கு தேர்வாகும் நபர்கள் இன்பவுண்ட் காலுக்கான அசோசியேட்ஸ்/ அனலிஸ்ட்டாக நியமனம் செய்யப்படுவார்கள். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் தகுதி மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.

    Advertisement

    நியமனம் எங்கே?

    பணிக்கு தேர்வாகும் நபர்கள் சோழிங்கநல்லூரில் உள்ள எச்சிஎல் அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான இண்டர்வியூ ஜுன் 22 முதல் ஜுன் 24 வரை 3 நாட்கள் காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் HCL AMB 6, 104-8, Sai Nagar, Ambattur Industrial Estate, Chennai, Tamil Nadu 600 076 என்ற முகவரியில் நடக்கும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.

    பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

    English Summary

    HCL IT Jobs 2026: HCL Tech is hiring for International Voice Process Walk in drive on June 22 to June 24 in Ambattur, Chennai. Selected candidates will be appointed in Sholinganallur.