IT Jobs: HCL-யில் காலியிடங்கள்.. ஜூன் 20ம் தேதி சென்னை, பெங்களூர் உள்பட 3 இடங்களில் இண்டர்வியூ

  • சென்னை: சென்னை, பெங்களூர் மற்றும் புனேவில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனங்களில் ஜூன் 20ம் தேதி இண்டர்வியூ நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த இண்டர்வியூவில் பங்கேற்று பயன்பெறலாம்.

    Advertisement

    எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் தற்போது ஜாவா சாப்ட்வேர் இன்ஜினியர் (Java Software Engineering) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    Advertisement

    இந்த பணிக்கு பிரைமரி ஸ்கில்லாக ஜாவா இருக்க வேண்டும். அதேபோல் ஃபிரேம்வொர்க்ஸ்ஸாக ஸ்பிரிங்புட் (SpringBoot), மைக்ரோசர்வீசஸ்(Microservices), மெசேஜ்ஜிங்கில் Kafka/RabbitmQ/MQ உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். Cloud-யில் AWS/AZure/Any Cloud, வெப் சர்வீசஸில் REST APIs உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும்.

    இவை எல்லவாற்றுக்கும் மேலாக 5+ ஆண்டுகள் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்பவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளது.

    இதற்கான இண்டர்வியூ ஜூன் 20ம் தேதி காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் 2 மணிநேரம் டெக்னிக்கல் டெஸ்ட்(Technical Test) இருக்கும். இதனால் சொந்தமாக லேப்டாப் எடுத்து செல்ல வேண்டும். லேப்டாப் இல்லாதவர்களும் அலுவலகம் சார்பில் வழங்கப்படும். இதற்கான இண்டர்வியூ 3 இடங்களில் நடைபெற உள்ளது.

    Advertisement

    இண்டர்வியூ என்பது சென்னையில் SDB1, Sholinganallur Campus-யில் இண்டர்வியூ நடக்கும். பெங்களூரில் SEZ, No.1129, Jigani Bommasandra Link Road, Jigani Industrial Areaவில் இண்டர்வியூ நடக்கும். புனே என்றால் Plot 6 & 8, Rajiv Gandhi Infoech Park, MIDC Phase I, Hinjewadi முகவரியில் நடக்கும்.

    பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

    English Summary

    HCL IT Jobs 2026: HCL walk in drive for Java Software Engineer roles. 5+ experience candidates can apply for this jobs. Interview to be held on June 20.