IT Jobs: அரியர்ஸ் இருந்தாலும் ஐடி வேலை.. சென்னை எச்சிஎல்–யில் மே 22ல் இண்டர்வியூ

  • சென்னை: சென்னை அம்பத்தூரில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் மே 22ம் தேதி இண்டர்வியூ நடைபெற உள்ளது. டிகிரி முடித்தவர்கள், அரியர்ஸ் வைத்திருப்போர் இந்த இண்டர்வியூவில் பங்கேற்கலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை சோழிங்கநல்லூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

    Advertisement

    எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது voice and Semi Voice Process பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணியை விரும்புவோருக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

    Advertisement

    கல்வி தகுதி என்ன?

    * இந்த பணிக்கு ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும். மாஸ்டர் டிகிரி படித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.
    * மாஸ்டர் டிகிரி என்றால் எம்பிஏ, எம்ஏ, எம்எஸ்சி, எம்காம் உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.
    * குறிப்பாக 2024, 2025, 2026ம் ஆண்டில் கல்லூரி படிப்புகளை முடித்திருக்க வேண்டும். அரியர்ஸ் இருப்போரும் விண்ணப்பம் செய்து இண்டர்வியூவில் பங்கேற்கலாம். தற்போது தேர்வு எழுதி ரிசல்ட்டுக்கு காத்திருப்போரும் விண்ணப்பம் செய்யலாம்.
    * பிஇ, பிடெக், இன்ஜினியரிங் எம்எஸ்சி ஐடி, எம்சிஏ உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்க வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.

    Advertisement

    என்னென்ன திறமைகள் வேண்டும்?

    இது Fresher-க்கான பணியாகும். இதனால் அனுபவம் தேவையில்லை. இந்த பணிக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். இன்டர்பர்ஷனல் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். Inbound மற்றும் Outbound கால்ஸ்க்கு ரெடியாக இருக்க வேண்டும். பணியானது UK, US, Austrialian Shift முறையில் இருக்கும். ரோட்டோஷனல் முறையில் ஷிப்ட் வரும். இதனால் நைட்ஷிப்ட் பார்க்க தயாராக இருக்க வேண்டும்.

    சம்பளம் என்ன?

    தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. Best In Industry என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். ஊழியர்களுக்கு அலுவலகத்தில் Cab வசதி செய்து கொடுக்கப்படும். இதுதவிர ஊழியர்களுக்கு இன்டர்நேஷனல் டிரெய்னர்கள் வழியாக பயிற்சி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    மே 22ல் இண்டர்வியூ

    இந்த பணிக்கான இண்டர்வியூ மே 22ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது. Face to Face முறையில் இண்டர்வியூ இருக்கும். இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் HCL Technologies - AMB 6, South Phase, Ambattur Industrial Estate, 8 , Madras, Thiruvallur High Road, Ambattur, Chennai என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.

    பணிக்கு தேர்வாகும் நபர்கள் No 602/3/138, Elcot Economic zone, Sholinganallur Medavakkam High Road, Sholinganallur - 600 119 என்ற முகவரியில் செயல்பட்டு வரும் அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இண்டர்வியூவுக்கு செல்வோர் லேப்டாப் எடுத்து செல்ல அனுமதி கிடையாது.

    Advertisement

    பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

    English Summary

    HCL IT Jobs 2026: HCL hiring fresher (2024/2025/2026) for Voice Processand Sei Voice Process on May 222026 at 10 AM to 3 PM at Ambattur in Chennai.