IT Jobs: ஆன்லைனில் ஜுன் 23ல் இண்டர்வியூ.. அழைக்கும் எச்சிஎல்.. பெங்களூரில் ஐடி வேலை ரெடி!

  • பெங்களூர்: பெங்களூரில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு முன் அனுபவம் தேவையில்லை. ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்தவர்கள் ஜுன் 23ம் தேதி நடக்கும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.

    Advertisement

    எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் தற்போது Voice Process O2C டொமைன் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணி Fresher-க்கானதாகும். இதனால் முன்அனுபவம் தேவையில்லை.

    Advertisement

    இருப்பினும் பணியை விரும்புவோருக்கு சில முக்கிய தகுதிகள் வேண்டும். அதன்படி விண்ணப்பம் செய்வோர் காலை மற்றும் அறிவியல் பிரிவில் ஏதாவது ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.

    பட்ட மேற்படிப்பு முடித்தவர்கள் என்றால் எம்பிஏ, எம்ஏ, எம்எஸ்சி, எம்காம் உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்கலாம். அதேவேளையில் எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, எம்சிஏ, பிஇ, பிடெக் படித்தவர்கள் என்றால் இண்டர்வியூவில் பங்கேற்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் ஆங்கிலத்தில் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும். இன்டர்பர்ஷனல் ஸ்கில் இருக்க வேண்டும். இன்பவுண்ட் மற்றும் அவுட்பவுண்ட் கால்ஸ்க்கு தயாராக இருக்க வேண்டும். அமெரிக்கா ஷிப்ட் அடிப்படையில் பணி இருக்கும். இதனால் நைட்ஷிப்ட் பார்க்கவும் தயாராக இருக்க வேண்டும்.

    Advertisement

    தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திறமை மற்றும் தகுதி அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். இந்த பணிக்கான இண்டர்வியூ ஜுன் 23ம் தேதி மாலை 4 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற உள்ளது.

    இண்டர்வியூவில் பங்கேற்பதற்கான லிங்க் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ளது. தேர்வாகும் நபர்கள் பெங்களூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர். பெங்களூரில் ஒயிட்பீல்டு பகுதியில் உள்ள அலுவலகத்தில் பணி இருக்கும். வாரத்தில் 5 நாட்கள் பணி. 2 நாட்கள் விடுமுறையாகும்.

    Advertisement

    பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

    English Summary

    HCL IT Jobs 2026: HCL hiring fresher (20242026) whitefield Bangalore Voice Process for O2C domain Virtual Interview on 23rd June at 4 PM to 5.30 PM. Selectied candidates will be appointed in Bangalore.