அனுபவம் வேண்டாம்.. பெங்களூர் ஐடி நிறுவனத்தில் அசத்தலான வேலை.. அக்டோபர் 31ல் ஆன்லைன் இண்டர்வியூ

  • பெங்களூர்: பெங்களூரில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு முன்அனுபவம் தேவையில்லை. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அக்டோபர் 31ம் தேதி நடக்கும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.

    Advertisement

    பெங்களூர் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் தற்போது வாய்ஸ் புராசஸ் (நெட்வொர்க்கிங் டொமைன்) பிரிவில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

    Advertisement

    இந்த பணிக்கு பிடெக் இன்பர்மேஷன் டெக்னாலஜி, எம்சிஏ, பிஇ படிப்பை முடித்தவர்கள் என்றால் விண்ணப்பம் செய்ய வேண்டாம்.

    மாறாக பிற பிரிவுகளில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். கலை மற்றும் அறிவியல் பிரிவில் 2024-2026 வரையிலான கல்வியாண்டில் டிகிரி முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும். பணி அனுபவம் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ISRO job: இஸ்ரோவில் வேலை பார்க்க விருப்பமா? பத்தாம் வகுப்பு, ஐடிஐ போதும்! கை நிறைய சம்பளம்.. ரெடியா?

    அதேவேளையில் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். இ-மெயில், சாட் சப்போர்ட் தெரிந்திருக்க வேண்டும். டேட்டா அப்டேட், டேட்டா மேனேஜ் உள்பட பிற பணிகள் நன்கு தெரிந்திருக்க வேண்டும். கஸ்டமர்களின் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காண்பது உள்ளிட்டவற்றில் ஆர்வமாக செயல்பட வேண்டும்.

    Advertisement

    தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திறமை அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் பெங்களூர் ஒயிட்பீல்ட்டின் ஐடிபிஎல் பகுதியில் உள்ள நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

    இந்த பணிக்கான இண்டர்வியூ அக்டோபர் 31ம் தேதி நடைபெற உள்ளது. இண்டர்வியூ ஆன்லைனில் தான் நடைபெற உள்ளது. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வோர் பணிக்கு தகுதியானவர்களாக இருக்கும்பட்சத்தில் ஆன்லைன் இண்டர்வியூ குறித்த விவரங்கள்அனுப்பி வைக்கப்படும்.

    Advertisement

    பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

    English Summary

    HCL IT Jobs 2026: HCL Tech for Voice Process Networking domain via virtual drive on October 31 in Bengaluru.