பெங்களூர்: எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ நாளை (அக்டோபர் 17) ஆன்லைனில் நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் பெங்களூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் தற்போது நெட்வொர்க்கிங் டொமைன் பிரிவில் - வாய்ஸ் புராசஸ் (Networking Domain - Voice Process) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இது Fresher-க்கான வேலைவாய்ப்பாகும். இதனால் பணி அனுபவம் எதுவும் தேவையில்லை. அதேவேளையில், விண்ணப்பம் செய்வோருக்கு தேவையான முக்கிய தகுதிகள் பற்றி இங்கு பார்க்கலாம். இந்த பணிக்கு கல்லூரியில் கலை மற்றும் அறிவியல் பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். இந்த படிப்பை 2024 முதல் 2026ம் ஆண்டுக்குள் முடித்திருக்க வேண்டும். அதேவேளையில் பிஇ, பிடெக் பிரிவில் இன்பர்மேஷன் டெக்னாலஜி, எம்சிஏ உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்கள் என்றால் விண்ணப்பம் செய்ய வேண்டாம். அதேபோல் ஆங்கிலத்தில் சரளமாக எழுதவும், பேசவும் தெரிந்திருக்க வேண்டும். மேலும் இ-மெயில், சாட் சப்போர்ட் தெரிந்திருக்க வேண்டும். கஸ்டமர்களின் பிரச்சனைகளை தீர்க்க தெரிந்திருப்பதோடு, டேட்டாபேஸ் சார்ந்த பணிகள் தெரிந்திருக்க வேண்டும். டேட்டா என்டர், அப்டேட், டேட்டா மேனேஜ் உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். திறமை அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இந்த பணிக்கான இண்டர்வியூ அக்டோபர் 17 ம் தேதி (நாளை) நடைபெற உள்ளது. இண்டர்வியூ ஆன்லைனில் தான் நடைபெறும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம். அதன்பிறகு இண்டர்வியூவுக்கான நேரம் பற்றிய விவரங்கள் தனிப்பட்ட முறையில் தெரிவிக்கப்படும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் பெங்களூர் ஐடிபிஎல் ஒயிட்பீல்ட் பகுதியில் உள்ள எச்சிஎல் நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Hereநாளை ஆன்லைனில் இண்டர்வியூ.. பெங்களூர் எச்சிஎல் நிறுவனத்தில் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு