மதுரை: மதுரையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ ஆன்லைனில் ஜூலை 29ம் தேதி (நாளை) மதியம் 12.30 மணி முதல் 1.30 மணிக்கு நடைபெற உள்ளது.
எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து பல்வேறு வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போத புதிய பணி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் தற்போது Process Associate - Non Voice Process பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி படிப்பை முடித்திருந்தால் போதும். அதேபோல் பட்ட மேற்படிப்பு என்றால் 2025ம் ண்டில் எம்பிஏ, எம்ஏ, எம்எஸ்சி, 2024 முதல் 2026 வரையிலான காலக்கட்டத்தில் எம்காம் படிப்புகளை முடித்தவர்கள் தகுதியானவர்கள். அதேவேளையில் பிஇ, பிடெக், எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, எம்சிஏ உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்கள் என்றால் விண்ணப்பம் செய்ய வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது. இது Fresherக்கான பணி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சம்பந்தப்பட்ட பிரிவில் ஓராண்டுக்கு குறைவான அனுபவம் கொண்டவர்களும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம். இந்த பணியை விரும்புவோருக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். இன்டர்பர்ஷனல் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். பணி என்பது US Shift முறையில் தான் இருக்கும். இதனால் இரவு பணிக்கு தயாராக இருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் பற்றி தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம், திறமை அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இந்த பணிக்கான இண்டர்வியூ ஜூலை 29 (நாளை) மதியம் 12.30 மணி முதல் 1.30 மணி வரை ஆன்லைனில் நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள லிங்க்-கை கிளிக் செய்து இண்டர்வியூவில் பங்கேற்கலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் மதுரையில் நியமனம் செய்யப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here