சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ நாளை (ஜூன் 18) பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை ஆன்லைனில் நடைபெற உள்ளது. இதில் பணி அனுபவம் இல்லாதவர்களும் பங்கேற்கலாம்.
எச்சிஎல் நிறுவனத்தில் தற்போது புராசஸ் அசோசியேட் (வாய்ஸ் புராசஸ் ஹெல்த் ஹேர் டொமைன்) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது Fresher-க்கான பணியாகும்.
இதனால், அனுபவம் இல்லாதவர்களும் இண்டர்வியூவில் பங்கேற்று பயன்பெறலாம். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு சில முக்கிய தகுதிகள் வேண்டும். அதன் விவரம் வருமாறு: அதன்படி கலை மற்றும் அறிவியல் பிரிவில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பை முடித்தவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்கலாம். இளநிலை என்றால் எந்த பிரிவாக இருந்தாலும் ஓகே. முதுநிலை என்றால் 2025ம் ஆண்டில் எம்பிஏ, எம்ஏ, எம்எஸ்சி, 2024-2026ல் எம்காம் முடித்தவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்கலாம். அதேவேளையில் பிஇ, பிடெக் எம்எஸ்சி ஐடி, கம்ப்யூட்டர் சயின்ஸ், எம்சிஏ படிப்பை முடித்தவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொருவருக்கும் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். இன்டர்பர்ஷனல் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். பணி என்பது US Shifts அடிப்படையில் இருக்கும். இதனால் இரவு பணிக்கும் தயாராக இருக்க வேண்டும். இன்பவுண்ட் மற்றும் அவுட்பவுண்ட் கால்ஸ்க்கு தயாராக இருக்க வேண்டும். தற்போதை அறிவிப்பில் பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்பவில்லை. Best In Industry என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திறமை அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். பணியில் சேர்வோருக்கு இன்டர்நேரஷனல் டிரெய்னர்கள் வைத்து பயிற்சி வழங்கப்படும். அலுவலகத்தில் Cab வசதி உள்ளது. இதனால் பிக்அப்-டிராப் வசதி கிடைக்கும். இந்த பணிக்கான இண்டர்வியூ நாளை (ஜூன் 18) பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரை ஆன்லைனில் நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்போர் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் விண்ணப்பம் செய்துஅதில் உள்ள லிங்க் வழியாக பங்கேற்கலாம். பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here