IT Jobs: நாளை இண்டர்வியூ.. எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

  • சென்னை: எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான இண்டர்வியூ நாளை (மே 27) காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது. டிகிரி முடித்து அனுபவம் இல்லாதவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

    Advertisement

    எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது Process Associate - Voice Process பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    Advertisement

    இது Freshers-க்கான பணியாகும். இதனால் முன்அனுபவம் தேவையில்லை. குறைந்தபட்சம் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி படிப்பை முடித்திருந்தாலே போதும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.

    பட்ட மேற்படிப்புக்கும் சான்ஸ்

    பட்ட மேற்படிப்பு என்றால் 2025ம் ஆண்டில் எம்பிஏ, எம்ஏ, எம்எஸ்சி, 2024, 2026ல் எம்காம் படித்தவர்களும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம். அதேவேளையில் பிஇ, பிடெக், எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, எம்சிஏ படிப்புகளை படித்தவர்கள் இந்த இண்டர்வியூவில் பங்கேற்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    என்னென்ன திறமைகள் வேண்டும்?

    இது Fresher-க்கான பணியாகும். இதனால் அனுபவம் தேவையில்லை. இந்த பணிக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். இன்டர்பர்ஷனல் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். Inbound மற்றும் Outbound கால்ஸ்க்கு ரெடியாக இருக்க வேண்டும். பணியானது US ஷிப்ட் அடிப்படையில் இருக்கும். இதனால் நைட்ஷிப்ட் பார்க்க தயாராக இருக்க வேண்டும்.

    Advertisement

    சம்பளம் என்ன?

    தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. Best In Industry என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். ஊழியர்களுக்கு அலுவலகத்தில் Cab வசதி செய்து கொடுக்கப்படும். இதுதவிர ஊழியர்களுக்கு இன்டர்நேஷனல் டிரெய்னர்கள் வழியாக பயிற்சி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாளை இண்டர்வியூ

    இந்த பணிக்கான இண்டர்வியூ நாளை (மே 27) காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணிக்குள் நடைபெற உள்ளது.Face to Face முறையில் இண்டர்வியூ இருக்கும். இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் No 602/3/138, Elcot Economic zone, Sholinganallur Medavakkam High Road, Sholinganallur - 600 119 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். பணிக்கு தேர்வாகும் பட்சத்தில் சோழிங்கநல்லூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

    Advertisement

    பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

    English Summary

    HCL IT Jobs 2026: HCL hiring fresher Process Assoicate Voice Process Walkin drive on May 27 at 11 AM - 3 PM at Sholinganallur in Chennai.