IT Jobs: நாளை காலை 11 மணிக்கு சென்னையில் இண்டர்வியூ.. அனுபவம் வேண்டாம்.. அழைக்கும் HCL

  • சென்னை: சென்னை அம்பத்தூரில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் நாளை இண்டர்வியூ நடைபெற உள்ளது. நாளை காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. இது Freshers-க்கான பணியாகும். இதனால் அனுபவம் தேவையில்லை. டிகிரி முடித்தவர்கள் நேரடியாக இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.

    Advertisement

    நம் நாட்டில் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக எச்சிஎல் உள்ளது. இந்த நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போதைய அறிவிப்பு பற்றி இங்கு பார்க்கலாம்.

    Advertisement

    தற்போது எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் வாய்ஸ் புராசஸ் அசோசியேட் (Voice Process Associate) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளது. இந்த பணிக்கு அனுபவம் தேவையில்லை. ஏதாவது ஒரு பிரிவில் கலை மற்றும் அறிவியல் பிரிவில் படிப்பை முடித்தவர்கள் இண்டர்வியூவில் நேரடியாக பங்கேற்கலாம்.

    மேலும் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். இ-மெயில், சாட் முறையில் சப்போர்ட் வழங்க வேண்டும். இருப்பினும் பிடெக் இன்பர்மேஷன் டெக்னாலஜி, எம்சிஏ, பிஇ படிப்பை முடித்தவர்கள் பங்கேற்க வேண்டாம் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
    தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் திறமை அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்டஇண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.

    Advertisement

    இதற்கான இண்டர்வியூ HCL Technologies AMB 6, 8, South Phase, MTH Road, Ambattur Industrial Estate, Ambattur, Chenna, Tamil Nadu 600 058 என்ற முகவரியில் நாளை காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூ தரைதளத்தில் (Ground Floor)-ரில் நடைபெற உள்ளது.

    இண்டர்வியூ செல்வோர் அதற்கான சான்றிதழ், ஆதார், பார்ன் கார்டு உள்ளிட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டையை கையில் வைத்திருப்பது நல்லது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

    Advertisement

    பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

    English Summary

    HCL IT Jobs 2026: HCL hiring for Fresher voice Process associate roles in Chennai. No need for experience and Bachelor's degree in anydisciplien can apply for this role. Interview to be held on June 10 in Chennai