மதுரை: மதுரையில் செயல்பட்டு வரும் Maitsys ஐடி நிறுவனத்தில் மார்க்கெட்டிங் அனலிஸ்ட், அமெரிக்கா ஐடி ரெக்ரூட்டர், எச்ஆர் எக்ஸிக்கியூட்டிவ், அக்கவுண்டன்ட் உள்ளிட்ட 4 பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு அனுபவம் தேவையில்லை. எம்பிஏ, பிபிஏ, பிகாம் உள்பட எந்த டிகிரி முடித்தாலும் இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்யலாம். இதற்கான இண்டர்வியூ ஜூலை 31ம் தேதி நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்து இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
மதுரையில் Maitsys எனும் ஐடி நிறுவனம் செயல்பட்ட வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதுபற்றிய முழுவிபரம் வருமாறு: இந்த நிறுவனத்தில் மொத்தம் 4 பிரிவுகளில் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. முதல் பணியின் பெயர் Marketing Analyst. இந்த பணிக்கு எம்பிஏ படிப்பை முடித்திருக்க வேண்டும். 2வது பணியின் பெயர் US IT Recruiter. இதற்கு ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். 3வது பணியின் பெயர் HR Executive. இந்த பணிக்கு எம்பிஏ (எச்ஆர்) படிப்பை கட்டாயம் முடித்திருக்க வேண்டும். 4வது பணியின் பெயர் Accountant. இந்த பணிக்கு பிகாம், எம்காம், பிபிஏ, எம்பிஏ (பைனான்ஸ்) படிப்புகளை படித்தவர்கள் விண்ணப்பம் செய்யாம். இது Fresher-க்கான அறிவிப்பாகும். இதனால் பணி அனுபவம் தேவையில்லை. இருப்பினும் கூட விண்ணப்பம் செய்வோருக்கு சில முக்கிய தகுதிகள் வேண்டும். அதன்படி ஒவ்வொருவரும் 2024, 2025, 2026 ஆகிய ஆண்டுகளில் கல்லூரி படிப்பை முடித்திருக்க வேண்டும். இந்த பணிக்கு ஆண்களும், பெண்களும் விண்ணப்பம் செய்யலாம். ஷிப்ட் என்பது இந்தியன் ஷிப்ட் மற்றும் US Shift முறையில் இருக்கும். பணியை பொறுத்து ஷிப்ட் மாறுபடும். இதனால் எந்த வகை ஷிப்ட்டாக இருந்தாலும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கபடவில்லை. தகுதி மற்றும் திறமை அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிப்பார்கள். இந்த பணிக்கான இண்டர்வியூ ஜூலை 31 (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 10 மணிக்கு இண்டர்வியூ தொடங்கும். இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் 4, Sivasakthi Nagar 7th Street, Royal Garden, Madurai - 20 எனற முகவரிக்கு செல்ல வேண்டும். பணியை விரும்புவோர் நேரடியாக தான் இண்டர்வியூ நடக்கும். ஆன்லைன் இண்டர்வியூ கிடையாது. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்து இண்டர்வியூவில் பங்கேற்கலாம். கையில் ரெஸ்யூம் மற்றும் ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ பிற ஆவணங்கள் இருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் மதுரையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 84388 06206 என்ற எண்ணில் எச்ஆர்-யை தொடர்பு கொள்ளலாம். கடந்த 3 மாதங்களில் இந்த நிறுவனத்தில் ஏதேனும் இண்டர்வியூவில் பங்கேற்று இருந்தால் அவர்கள் தற்போது விண்ணப்பம் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here