IT Jobs: ஜுன் 20ம் தேதி சென்னை டிசிஎஸ் அலுவலகத்தில் இண்டர்வியூ.. டிகிரி போதும்.. வேலைக்கு சேர தயாரா?

  • சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் டிகிரி முடித்தோருக்கு புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ சென்னை சிறுசேரி நவலூரில் சிப்காட் ஐடி பார்க்கில் ஜூன் 20ம் தேதி நடைபெற உள்ளது.

    Advertisement

    தற்போது டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் இருந்து இன்டர்நேஷனல் கேஒய்சி (International KYC) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு குறைந்தபட்சம் டிகிரி முடித்திருக்க வேண்டும்.

    Advertisement

    அதேபோல் பட்ட மேற்படிப்பு முடித்தோரும் விண்ணப்பம் செய்யலாம். டிகிரி படிப்பை ரெகுலர் முறையில் படித்திருக்க வேண்டும். தொலைதூர கல்வியில் படித்து இருக்க கூடாது. அதேபோல் டிகிரி மற்றும் வேலைவாய்ப்புக்கு இடையே 2 ஆண்டுக்கு மேலான இடைவெளி இருக்க கூடாது.

    குறிப்பாக International KYC (EDD, CDD, Banking, AML) உள்ளிட்டவை ஸ்கில்செட்டாக இருக்க வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் ஓராண்டு முதல் 6 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். ஷிப்ட் என்பது சுழற்சி முறையில் இருக்கும். இதனால் நைட் ஷிப்ட் பார்க்கவும் தயாராக இருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமை அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்படும்.

    Advertisement

    இந்த பணிக்கான இண்டர்வியூ ஜூன் 20ம் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் Tata Consultancy Services LTD, 1/G1, SIPCOT IT Park Navalur, Siruseri, Chennai - 603103 என்ற முகவரியில் நடைபெற உள்ளது.

    இண்டர்வியூ செல்வோர் அரசு அடையாள அட்டை ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ், ரெஸ்யூம், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, அனைத்து வகையான கல்வி சான்றிதழ்கள், பணி அனுபவம் சார்ந்த சான்றிதழ்கள் மற்றும் இபிஎஃப்ஓவின் ஜெராக்ஸ் உள்ளிட்டவை வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    அதேபோல் டிசிஎஸ் சார்பில் கட்டணம் எதுவும் கிடையாது. யாராவது பணிக்கான ஆசை காட்டி பணம் கேட்டால் கொடுக்க வேண்டாம். இப்படி ஏதாவது பிரச்சனை வந்தால் அதற்கு டிசிஎஸ் நிர்வாகம் பொறுப்பேற்காது. இதனால் வேலை வாங்கி தருவதாக யாரும் கூறினால் அதனை நம்ப வேண்டாம்.

    பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

    English Summary

    TCS IT jobs 2026: TCS hiring for International KYC. Bachelor's degree holders can apply for this roles. Interview to be held on June 20.