சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் இருந்து காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ சென்னையில் அக்டோபர் 31ம் தேதி நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் தற்போது AEP Developer (Adobe Experience Platform Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்? என்பது பற்றி இங்கு பார்க்கலாம். இந்த பணிக்கு அடோஃப் எக்ஸ்பிரியன்ஸ் பிளாட்பார்ம், மற்றும் ஆர்டிசிடிபி அல்லது சிஜேஏ, ஏேஓ மற்றும் இன்டெலிஜென்ஸ் சர்வீசஸ் (டேட்டா சயின்ஸ், கஸ்டமர் ஏஐ, அட்ரிபூஷன் ஏஐ) உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். Agile டெவலப்மென்ட் மெத்தடாலஜிஸ் மற்றும் டிடிடி, ஏடபிள்எஸ்/சேல்ஸ்போர்ஸ் சிஆர்எம், மார்கிடோ பற்றி தெரிந்திருக்க வேண்டும். பிக் டேட்டாகிளவுட் பிளாட்பார்ம் அல்லது அடோப் எக்ஸ்பிரியன்ஸ் கிளவுட் புராடக்ஸ் உள்ளிட்டவற்றில் 3+ ஆண்டுகள் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். பேக்எண்ட் டெக்னாலஜிஸ்களான பைத்தான், ஜாவா, ஜே2இஇ, டாம்கட் ரெஸ்ட் உள்ளிட்டவற்றிலும் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். சாப்ட்வேர் ஆர்க்கிடெக்ச்சர், டிசைன் மற்றும் பிரச்சனைகளை தீர்க்கும் திறனில் சிறந்து இருக்க வேண்டும். மேலும் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். Agile மெத்தடாலஜியில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 6 ஆண்டு முதல் 8 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் வழங்கப்பட வாய்ப்புள்ளது. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். இந்த பணிக்கான இண்டர்வியூ அக்டோபர் 31 (சனிக்கிழமை, நாளை மறுநாள்) காலை 9 மணி முதல் மதிம் 1 மணி வரை சென்னையில் நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் Tata Consultancy Services, Ozone Techno Park, 24, Rajiv Gandhi Salai, Navalur, Chennai, Tamil Nadu 600 130 என்ற முகவரிக்கு சென்று இண்டர்வியூவில் பங்கேற்கலாம். பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here