IT Jobs: மே 23ம் தேதி சென்னையில் இண்டர்வியூ.. டிசிஎஸ் தரும் சூப்பர் சான்ஸ்

  • சென்னை: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ சென்னை சிறுசேரியில் செயல்பட்டு வரும் டிசிஎஸ் நிறுவனத்தில் மே 23ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் நேரடியாக இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.

    Advertisement

    டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் தற்போது AML - Transaction Monitoring பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இவர்கள் இடைவெளி இன்றி பள்ளி, கல்லூரி படிப்பை முடித்திருக்க வேண்டும்.

    Advertisement

    மேலும் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். ஷிப்ட் அடிப்படையில் பணி இருக்கும். இதனால் அனைத்து வகையான ஷிப்ட்டிலும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும்.

    இதுதவிர சில முக்கிய தகுதிகள் வேண்டும். அதன்படி Case Review-வில் ரெட்பிளாக்கை அடையாளம் காண வேண்டும்.இன்டர்நேஷனல் பேங்கிங் மற்றும் குளோபல் பேங்கிங் உள்ளிட்டவற்றில் அனுபவம்கொண்டிருக்க வேண்டும். PFB நார்ம்ஸ் பின்பற்ற வேண்டும். இன்னொரு நிறுவனத்தில் பணியாற்றி வருவோர் என்றால் அங்கிருந்து Relieving Letter கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

    இந்த பணிக்கான இண்டர்வியூ மே 23ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் Tata Consultancy Services Ltd, 1/G1,SIPOT IT Park Navalur, Siruseri, Chennai, Tamil Nadu 603 103 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.

    Advertisement

    இண்டர்வியூவுக்கு செல்வோர் அரசு அடையாள அட்டை ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ் வை்ததிருக்க வேண்டும். பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, அனைத்து வகையான கல்வி சான்றிதழ்கள், அனுபவ சான்றிதழ்கள், இபிஎஃப்ஓ-வின் ஜெராக்ஸ் உள்ளிட்டவற்றை வைத்திருக்க வேண்டும்.

    தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வழியாக விண்ணப்பம் செய்யலாம் . தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வழியாக விண்ணப்பம் செய்யலாம் . பணிக்கு விண்ணப்பிக்க Click Here செய்யவும்.

    அதேவேளையில் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள் என்றால் விண்ணப்பம் செய்ய வேண்டாம்என்று கூறப்பட்டுள்ளது. கல்லூரி படிப்புக்கும், பணிக்கும் இடையே 2 ஆண்டு மட்டுமே இடைவெளி இருக்க வேண்டும். அதற்கு மேல் இருக்க கூடாது.

    Advertisement

    அதேபோல் கடந்த 6 மாதம் இண்டர்வியூவில் பங்கேற்றவர்கள் என்றால் இதற்கு விண்ணப்பம் செய்ய வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. டிசிஎஸ் சார்பில் பணி நியமனம் அல்லது இண்டர்வியூவுக்கு என்று பணம் எதுவும் கேட்கப்படாது. இதனால் யாரும் பணம் கொடுத்து ஏாமாற வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    TCS IT Jobs: TCS direct walk in opportunit for AML -Transaction Moitoring at Chennai on 23rd May. Selected candidates will be appointed at Chennai.