IT Jobs: திருவனந்தபுரத்தில் டிசிஎஸ் நிறுவனத்தில் ஐடி வேலை ரெடி.. ஜுன் 27 ம் தேதி இண்டர்வியூ

  • சென்னை: திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ ஜுன் 27 ம் தேதி நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.

    Advertisement

    டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் டிசிஎஸ் நிறுவனத்தில் தற்போது. NET Full Stack Developer with Azure பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    Advertisement

    இந்த பணிக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ், சாப்ட்வேர் இன்ஜினியரிங் அல்லது தொடர்புடைய பிரிவில் கல்லூரி படிப்பை முடித்திருக்க வேண்டும். Full Stack Development, .NET Technologies-யில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

    C#, ASP.NET, .NET Core அனுபவம் கொண்டிருக்க வேண்டும். டிசைன் பேட்டர்ன், சாலிட் பிரின்சிபள் பற்றிய புரிதல் இருக்க வேண்டும். RESTFful APIS மற்றும் மைக்ரோசர்வீசஸ் ஆர்க்கிடெக்ச்சர் உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். பிரச்சனைகளை தீர்க்கும் திறன், ட்ரபிள்சூட்டி காம்பளக்ஸ் தெரிந்திருக்க வேண்டும்.

    FrontEnd டெக்னாலஜிஸ் எச்டிஎம்எல் 5, சிஎஸ்எஸ்3, ஜாவா ஸ்கிரிப்ட், ஃப்ரண்ட் எண்ட்ஃபிரேம்வொர்க்ஸ் (React, Angular) தெரிந்திருக்க வேண்டும். கண்ட்ரோல் சிஸ்டம்ஸ் (Git), Agile Methodologies Using JIRA, Confluence ஆகியவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 5 ஆண்டு முதல் அதிகபட்சமாக 12 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

    Advertisement

    தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அனுபவம் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். இந்த பணிக்கான இண்டர்வியூ ஜுன் 27 ம் தேதி நடைபெற உள்ளது. இண்டர்வியூவுக்கு செல்போர் ரெஸ்யூம், டிசிஎஸ் அப்ளிகேஷன் ஃபார்ம், 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, அரசு அடையாள அட்டை உள்ளிட்டவை வைத்திருக்க வேண்டும்.

    பணிக்கு தேர்வாகும் நபர்கள் திருவனந்தபுரத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும். அதன்பிறகு இண்டர்வியூவில் பங்கேற்கலாம். டிசிஎஸ் நிறுவனத்தில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இண்டர்வியூவில் பங்கேற்றவர்கள் இதற்கு விண்ணப்பம் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

    English Summary

    TCS IT Jobs 2026: TCS walk in drive planned on 27thJune 2026 for Dotnet Full Stack Developer with Azure in TCS Trivandrum. 5 to 12 years experience candidates can attend this interview.