IT Jobs: சென்னையில் நாளை இண்டர்வியூ.. TCS தரும் அசத்தலான வேலைவாய்ப்பு!

  • சென்னை: சென்னை துரைப்பாக்கத்தில் செயல்பட்டு வரும் டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் நாளை இண்டர்வியூ நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்று பயன் பெறலாம்.

    Advertisement

    அதன்படி டிசிஎஸ் நிறுவனத்தில் தற்போது எஸ்கலெஷன் டெஸ்க் (Escalation Desk) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணியை விரும்புவோருக்கு சில முக்கிய தகுதிகள் வேண்டும். அதன் விவரம் வருமாறு:

    Advertisement

    விண்ணப்பம் செய்வோருக்கு ஐடிஐஎல் புராசஸ், குறிப்பாக மேனேஜ்மென்ட், மேஜர் இன்சிடென்ட் மேனேஜ்மென்ட் மற்றும் ரெக்யொஸ்ட் ஃபுல்பில்மென்ட் பற்றிய புரிதல் இருக்க வேண்டும்.

    அதேபோல் SLA, OLA மற்றும் KPI மானிட்டரிங்கில் எக்ஸ்பர்ட்டாக இருக்க வேண்டும். சர்வீஸ்நவ் ஐடிஎஸ்எம் பணியில் அனுபவம் இருக்க வேண்டும். அதில் க்யூஸ், பரேண்ட்- சைல்ட் டிக்கெட்ஸ், எஸ்எல்ஏ கிளாக்ஸ் மற்றும் டேஸ்போர்ட்ஸ் உள்ளிட்டவற்றில் நல்ல அறிவை பெற்றிருக்க வேண்டும்.

    கிளைண்ட்டிடம் நன்றாக ஆங்கிலத்தில் பேச தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் வாய்ஸ்கால் ஆபரேஷன்ஸ் தெரிந்திருக்க வேண்டும். ரோட்டேஷனல் ஷிப்ட்டில் பணியாற்ற தெரிந்திருக்க வேண்டும். குறிப்பாக நைட் ஷிப்ட்டிற்கும் தயாராக இருக்க வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

    Advertisement

    இந்த பணிக்கான இண்டர்வியூ நாளை (ஜுன் 20) நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் TCS Magnum Block, Chennai One IT SEZ phase -2, 200 Fet Radial Road, MCN Nagar Extension, Thoraipakkam, Chennai, Tamil Nadu 600 097 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

    தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தகுதி, திறமை அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் மற்றும் இண்டர்விவியூவில் பங்கேற்க விரும்புவோர் மட்டும் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும் என்றுகூறப்பட்டுள்ளது.

    Advertisement

    பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

    English Summary

    TCS IT Jobs 2026: TCS hiring for escalation desk. Walk in drive on June 20 in Chennai. 4 - 7 years experience candidates can apply for this jobs.