மதுரையில் நர்ஸ் வேலை.. எக்ஸாம் கிடையாது.. 63 ஆயிரம் வரை சம்பளம்.. எப்படி விண்ணப்பிப்பது?

  • சென்னை: மதுரை மாவட்ட சுகாதாரத் துறை கீழ் செயல்படும் மாவட்ட நலவாழ்வுச் சங்கத்தின் மூலம் சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 82 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மருத்துவ அலுவலர், செவிலியர், சுகாதார ஆய்வாளர், டிரைவர் என பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.63 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும்.

    Advertisement

    தமிழகத்தில் உள்ள சுகாதார நிலையங்களில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மதுரை மாவட்ட சுகாதாரத் துறை கீழ் செயல்படும் மாவட்ட நலவாழ்வுச் சங்கத்தின் மூலம் 82 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மருத்துவ அலுவலர், செவிலியர், ஆய்வக தொழில்நுட்ப நிபுணர், மருந்தாளர், சுகாதார ஆய்வாளர், டிரைவர் என பல்வேறு பதவிகளில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

    Advertisement

    காலிப்பணியிடங்கள் விவரம்:

    மருத்துவ அலுவலர் - 3
    செவிலியர் - 10
    சுகாதார ஆய்வாளர் - 4
    பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் - 19
    ஆய்வக தொழில்நுட்ப நிபுணர் - 12
    மருந்தாளர் - 2

    ஏ.என்.எம். - 26
    நகர்ப்புற சுகாதார மேலாளர் - 2
    பிசியோதெரபிஸ்ட் - 2
    டிரைவர் - 1
    கணக்கு உதவியாளர் - 1

    கல்வித் தகுதி:

    கல்வித் தகுதியை பொறுத்தவரை தகுதிக்கு ஏற்ப மாறுபடும். பொதுவாக இந்த பணிகளுக்கு 8-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, பிஎஸ்சி நர்சிங், எம்.எஸ்.சி நர்சின், பிகாம், எம்பிபிஎஸ் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    வயது வரம்பு:

    பணியிடங்களுக்கு தகுந்தபடி வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மருத்துவ அலுவலர், செவிலியர், ANM, டிரைவர், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் போன்ற பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 40 வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மற்ற பணியிடங்களுக்கு 35 வயதுக்கு மிகாதவர்களாக இருத்தல் வேண்டும்.

    Advertisement

    சம்பளம் எவ்வளவு?

    மருத்துவ அலுவலர் - ரூ.63,000
    நகர்ப்புற சுகாதார மேலாளர் - ரூ.27,000
    பிசியோதெரபிஸ்ட் - ரூ.23,000
    செவிலியர் - ரூ.21,000
    கணக்கு உதவியாளர் - ரூ.19,000
    மருந்தாளர் - ரூ.18,000

    சுகாதார ஆய்வாளர் - ரூ.17,500
    ANM - ரூ.17,500
    டிரைவர் - ரூ.17,500
    ஆய்வக தொழில்நுட்ப நிபுணர் - ரூ.17,000
    பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் - ரூ.11,000

    தேர்வு முறை:

    தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத் தேர்வில் வெற்றிபெறுபவர்களுக்கு பதவி வழங்கப்படும்.

    எப்படி விண்ணப்பிப்பது?

    ஆஃப்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மதுரை மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் சுயசான்று நகல்களுடன் அஞ்சல் வழியாகவோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்க வேண்டும்.

    Advertisement

    விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

    மாவட்ட சுகாதார அலுவலர் / செயல் செயலாளர்,
    மாவட்ட சுகாதார சங்கம்,
    மாவட்ட சுகாதார அலுவலகம்,
    விஸ்வநாதபுரம்,
    மதுரை - 625014.

    விண்ணப்பிக்க கடைசி தேதி:

    தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 24.07.2026-க்குள் தங்கள் விண்ணப்பங்கள் சென்று சேரும்படி பார்த்துக் கொள்ளுங்கள். இந்த பணியிடங்கள் நிரந்தர பணிகள் அல்ல. ஒப்பந்த அடிப்படையிலான ஒரு ஆண்டு கால பணியிடங்கள் ஆகும்.

    தேர்வு அறிவிப்பினை படிக்க: https://cdn.s3waas.gov.in/s3f5f8590cd58a54e94377e6ae2eded4d9/uploads/2026/07/17835112706786.pdf

    English Summary

    Madurai District Health Society has invited offline applications for 82 contract-based vacancies, including Medical Officer, Staff Nurse, ANM, Lab Technician, Pharmacist and Driver. Eligible candidates must submit their applications on or before July 24, 2026.