சென்னை: நீலகிரியில் உள்ள வெலிங்டன் டிபன்ஸ் சர்வீஸ் ஸ்டாப் காலேஜ் (DSSC) எனப்படும் முப்படை உயர் அதிகாரிகளுக்கான பயிற்சி கல்லூரியில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. சூப்பர் வைசர், தொழில்நுட்ப உதவியாளர் என மொத்தம் 78 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.92,300 வரை வழங்கப்படும்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் பகுதியில் டிபன்ஸ் சர்வீஸ் ஸ்டாப் காலேஜ் (DSSC) எனப்படும் முப்படை உயர் அதிகாரிகளுக்கான பயிற்சி கல்லூரி செயல்பட்டு வருகிறது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த பயிற்சி மையத்தில் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த மையத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் பணியாற்றுகிறார்கள். இந்த மையத்தில் காலியாக உள்ள குரூப் சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம். லோயர் டிவிஷன் கிளர்க் - 09 நெட்வொர்க் அட்மினிஸ்ட்ரேட்டர் - 04 என மொத்தம் 78 காலியிடங்கள் உள்ளன. பணியிடங்களுக்கு தகுந்தபடி கல்வித் தகுதி மாறுபடும். லோயர் டிவிஷன் கிளர்க் பணிக்கு 12 ஆம் வகுப்பு முடித்து இருக்க வேண்டும். நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் டைப்பிங் செய்யும் திறன் அவசியம். டிரைவர் பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ஹெவி வாகனம் ஓட்டுவதற்கான லைசன்ஸ் அவசியம். டிரைவிங் துறையில் இரண்டு ஆண்டுகள் அனுபவம் அவசியம். மல்டி டாஸ்கிங் ஸ்டாப் பணிக்கு பத்தாம் வகுப்பு முடித்து இருப்பது அவசியம். சூப்பர்வைசர் பணிக்கு என்ஜினியரிங் பிரிவு அல்லது டெக்னாலஜி அல்லது கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில் டிகிரி முடித்து இருப்பது அவசியம். இரண்டு ஆண்டுகள் பணி அனுபவமும் அவசியம். விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயதும் அதிகபட்சமாக 27 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகளும் அளிக்கப்படும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும். லோயர் டிவிஷன் கிளார்க்: ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை சூப்பர்வைசர் (நெட்வொர்க்கிங்): ரூ.29,200 முதல் ரூ.92,300 வரை எழுத்து தேர்வு, திறன் தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். டிடியாக எடுத்து அனுப்ப வேண்டும். 'DSSC Direct Recruitment 2026" payable at Canara Bank, DSSC Branch (Code 16239). என்ற பெயரில் டிடி எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். தபால் வழியாக விண்ணப்ப படிவங்களை அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க வரும் 12.06.2026 கடைசி நாளாகும். அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.dssc.gov.in/பணியிடங்கள் விவரம்:
சிவிலியன் வாகன ஓட்டுநர் - 13
Multi Tasking Staff (அலுவலகம் & பயிற்சி) - 38
சுருக்கெழுத்தர் - 05
சூப்பர்வைசர் (நெட்வொர்க்கிங்) - 01
ஹார்ட்வேர் அட்மினிஸ்ட்ரேட்டர் - 04
லைன்மேன் (Lineman) - 02
போட் பில்டர் - 01
தொழில்நுட்ப உதவியாளர் - 01
அச்சு இயந்திர இயக்குபவர் - 01கல்வித் தகுதி:
வயது வரம்பு:
சம்பளம் எவ்வளவு:
சிவிலியன் மோட்டார் டிரைவர்: ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை
மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் (அலுவலகம் & பயிற்சி): ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை
ஸ்டெனோகிராபர் கிரேடு-II: ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை
நெட்வொர்க் அட்மினிஸ்ட்ரேட்டர்: ரூ.29,200 முதல் ரூ.92,300 வரை
ஹார்ட்வேர் அட்மினிஸ்ட்ரேட்டர்: ரூ.29,200 முதல் ரூ.92,300 வரை
லைன்மேன்: ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை
படகு கட்டுநர்: ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை
தொழில்நுட்ப உதவியாளர்: ரூ.18,000 முதல் ரூ.56,900 வரைதேர்வு முறை: