தூத்துக்குடி, திண்டுக்கல் மாவட்டங்களில் நர்ஸ், மருத்துவ உதவியாளர் வேலை.. விண்ணப்பிப்பது எப்படி?

  • சென்னை: திண்டுக்கல் மற்றும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில் நர்ஸ், மருத்துவ உதவியாளர், இடைநிலை சுகாதாரப் பணியாளர், பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர், சித்த மருத்துவர், சிகிச்சை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு யார் யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்? எப்படி விண்ணப்பிப்பது உள்ளிட்ட விவரங்களை காணலாம்.

    Advertisement

    திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள ஒப்பந்த பணியிடங்களில் பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுபற்றிய விவரங்கள் பார்க்கலாம்.

    Advertisement

    பணியிடங்கள்:

    ஆடியோலாஜிஸ்ட் நிபுணர் மற்றும் பேச்சுப் பயிற்சியாளர், தொழில்சார் சிகிச்சையாளர், ஆடியோமெட்ரிஷியன், ரேடியோகிராபர், உதவியாளர், இடைநிலை சுகாதாரப் பணியாளர், பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர், சித்த மருத்துவர், யுனானி மருத்துவர், சிகிச்சை உதவியாளர் மாவட்டத் தர ஆலோசகர், திட்ட நிர்வாக உதவியாளர், காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர் என பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 36 காலியிடங்கள் உள்ளன.

    கல்வித் தகுதி:

    8 ஆம் வகுப்பு, ஏஎன்எம், டிஜிஎன்எம், பிஎஸ்சி நர்சிங், டிஎம்எல்டி, பிஎஸ்எம்எஸ், எம்பிபிஎஸ் முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

    தூத்துக்குடி மாவட்டத்தில்

    ஆடியோ மெட்ரிக் உதவியாளர், தர மேலாளர், மருத்துவ அதிகாரி, பல் மருத்துவ உதவியாளர், வாகன ஓட்டுநர் உள்பட 11 காலிப்பணியிடங்கள் உள்ளன்.

    Advertisement

    கல்வித் தகுதி:

    கல்வித்தகுதியை பொறுத்தவரை 8 ஆம் வகுப்பு, டிஜிஎன்எம், / பிஎஸ்சி நர்சிங், டிடிஒய்டிஹெச்ஹெச், எம்பிபிஎஸ், பிஎஸ்டபிள்யூ/எம்எஸ்டபிள்யூ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆஃப்லைன் மூலமாக இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

    திண்டுக்கல் மாவட்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

    திண்டுக்கல் மாவட்ட நலவாழ்வு சங்கம்,
    மாவட்ட சுகாதார அலுவலகம்,
    மீனாட்சிநாயக்கன்பட்டி,
    திண்டுக்கல்- 624002, (தொலைபேசி எண்: 04512 2432817)

    தூத்துக்குடி மாவட்டத்திற்கு:

    மாவட்ட சுகாதார அலுவலர்,
    மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம்,
    மாப்பிள்ளையூரணி ஆரம்ப சுகாதார நிலைய வளாகம்,
    மாப்பிள்ளையூரணி, தூத்துக்குடி- 628002

    தேர்வர்கள் அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பை படித்து உறுதி செய்த பிறகு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    English Summary

    Nurse, Medical Assistants Jobs: A notification has been issued to fill various contract-based positions—including nurses, medical assistants, mid-level health providers, multi-purpose hospital workers, Siddha doctors, and therapy assistants—at Government Medical College Hospitals and Government Primary Health Centres in Dindigul and Thoothukudi districts. Here are the details regarding eligibility and the application process.