பஞ்சாப் & சிண்ட் வங்கியில் 635 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்.. தமிழ் மொழி தெரிந்தவங்களுக்கு ஜாக்பாட்


  • சென்னை: பஞ்சாப் அண்ட் சிண்ட் வங்கியில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 635 அப்ரென்டிஸ் அல்லது பயிற்சிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிப்பவர்களுக்கு உள்ளூர் மொழி தெரிந்திருப்பது கட்டாயம் ஆகும்.

    Advertisement

    நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி ஒன்றாகும். கடந்த 1908 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வங்கியின் தலைமையகம் டெல்லியில் அமைந்துள்ளது. நாடு முழுக்க பல்வேறு கிளைகளுடன் பல்வேறு நிதி சேவைகளை வழங்கி வருகிறது. தற்போது இந்த வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    பணியிடங்கள் விவரம்:

    நாடு முழுக்க 635 அப்ரென்டிஸ் அல்லது பயிற்சிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. ஆந்திரப் பிரதேசம் - 20, பீகார் - 40, சண்டிகர் - 15, டெல்லி (NCT) - 30, குஜராத் - 20, ஹரியானா - 50, இமாச்சலப் பிரதேசம் - 20, ஜார்க்கண்ட் - 10, கர்நாடகா - 10, கேரளா - 05, மத்தியப் பிரதேசம் - 20, மகாராஷ்டிரா - 30, ஒடிசா - 15, பஞ்சாப் - 90, ராஜஸ்தான் - 30, தமிழ்நாடு - 20, தெலுங்கானா - 20, உத்தரப் பிரதேசம் - 100, மேற்கு வங்கம் - 20. பஞ்சாப் அண்ட் சிண்ட் வங்கியின் இந்த அப்ரென்டிஸ் பணி ஒரு தற்காலிகப் பணிதான்.

    Advertisement

    கல்வித் தகுதி

    குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பை முடித்தவர்கள் இந்த அப்ரென்டிஸ் பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பிக்கும் மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தின் உள்ளூர் மொழியை வாசிக்க, எழுத, பேச மற்றும் புரிந்துகொள்ளும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

    இதற்கு ஆதாரமாக, 8, 10, 12 ஆம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பில் அந்த மொழியை ஒரு பாடமாகப் படித்ததற்கான மதிப்பெண் சான்றிதழை அல்லது சான்றை சமர்ப்பிக்க வேண்டும். தமிழகத்தில் எனில் தமிழை ஒரு பாடமாக படித்து இருக்க வேண்டும்.

    முதுகலைப் பட்டப்படிப்பை முடித்தவர்கள், அப்ரென்டிஸ் பயிற்சிக்குத் தகுதியற்றவர்கள் ஆவார்கள். அதேபோல், ஒரு வருடமோ அல்லது அதற்கு மேற்பட்ட பணி அனுபவம் உள்ளவர்களும் விண்ணப்பிக்க இயலாது.

    Advertisement

    வயது வரம்பு

    01.05.2026 நிலவரப்படி, விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 20 ஆகவும், அதிகபட்ச வயது 28 ஆகவும் இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பில், பட்டியல் சாதிகள் (SC)/பழங்குடியினருக்கு (ST) ஐந்து ஆண்டுகளும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) மூன்று ஆண்டுகளும் சலுகை உண்டு. மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் பிரிவை பொறுத்து 10 முதல் 15 ஆண்டுகள் வரை வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.

    சம்பளம் எவ்வளவு

    தேர்ந்தெடுக்கப்படும் அப்ரென்டிஸ் பணியாளர்களுக்கு மாதம்தோறும் ரூ.12,300/- உதவித்தொகையாகக் கிடைக்கும்.

    தேர்வு முறை

    விண்ணப்பதாரர்கள் தகுதிப் பட்டியல், நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
    விண்ணப்ப கட்டணம்

    Advertisement

    விண்ணப்பக் கட்டணமாக, பட்டியல் சாதிகள் (SC), பழங்குடியினர் (ST) மற்றும் மாற்றுத்திறனாளி (PWD) பிரிவினருக்கு ரூ.100/- வசூலிக்கப்படும். இதர அனைத்துப் பிரிவினரும் ரூ.200/- செலுத்த வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் வழியே மட்டுமே செலுத்த முடியும்.

    தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படித்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. விண்ணப்பிக்கும் முன், www.apprenticeshipindia.gov.in மற்றும் nats.education.gov.in ஆகிய அப்ரென்டிஸ்ஷிப் போர்ட்டல்களில் பதிவு செய்திருக்க வேண்டும்.

    விண்ணப்பிக்க கடைசி நாள்

    21.05.2026 அன்று முதல் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 06.06.2026 ஆகும்.

    Advertisement

    அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பினை படிக்க: Click Here

    English Summary

    Punjab & Sind Bank has announced recruitment for 635 Apprentice posts across various locations. Candidates with a degree in any discipline can apply. Knowledge of the local language is mandatory, making Tamil-speaking applicants eligible for opportunities in Tamil Nadu.