இந்தியன் ரயில்வேயில் வேலைவாய்ப்பு! டிகிரி போதும்.. பொன்னான வாய்ப்பு.. தூள் கிளப்புங்க


  • சென்னை: இந்தியன் ரயில்வேயில் வேலைவாய்ப்பு (Railway job) அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 119 செக்‌ஷன் கண்ட்ரோலர் பணியிடங்களானது நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடங்களுக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.35,400 சம்பளம் வழங்கப்படும்.

    Advertisement

    நாட்டின் மிகப்பெரிய அரசு நிறுவனமாக இந்திய ரயில்வே உள்ளது. மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ரயில்வே துறையில் லட்சக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். ரயில்வே துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊதிய கமிஷன் விகிதப்படி கை நிறைய சம்பளம் வழங்கப்படுகிறது.

    Advertisement

    இதன் காரணமாக ரயில்வே வேலைக்கு சேர வேண்டும் என்ற கனவுடன் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போட்டி தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள் ரயில்வேயை பொறுத்தவரை ரயில்வே தேர்வு வாரியம் (RRB) உரிய அறிவிப்புகளை வெளியிட்டு நிரப்பி வருகிறது. அந்த வகையில், தற்போது செக்‌ஷன் கண்ட்ரோலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வந்துள்ளது.

    பணியிடங்கள் விவரம்:

    செக்‌ஷன் கண்ட்ரோலர்: 119 பணியிடங்கள்
    மண்டல வாரியாக
    அகமதாபாத் - 11
    அஜ்மீர் - 01
    பிரயாக்ராஜ் - 04
    பெங்களூர் - 08

    IOB Job: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 750 பணியிடங்கள்.. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
    Advertisement

    போபால் - 06
    புவனேஸ்வர் - 06
    பிலாஸ்பூர் - 04
    சண்டிகர் - 06
    சென்னை - 09
    கோரக்பூர் - 05
    கவுகாத்தி - 01
    கொல்கத்தா - 08

    மால்டா - 07
    மும்பை - 06
    முசாபர்பூர் - 03
    பாட்னா - 06
    ராஞ்சி - 14
    செகந்திராபாத் - 05
    சிலிகுரி - 05
    திருவனந்தபுரம் - 04

    கல்வித் தகுதி:

    அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    மத்திய அரசு நிறுவனத்தில் வேலை.. மாதம் ரூ.1.40 லட்சம் சம்பளம்.. டிகிரி முடித்தவர்களுக்கு ஜாக்பாட்!
    Advertisement

    வயது வரம்பு:

    01.07.2026 தேதிப்படி 20 வயது முதல் 33 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளு சலுகை உண்டு. அதாவது எஸ்சி/எஸ்டி பிரிவினர் என்றால் 38 வயது வரை விண்ணப்பிக்க முடியும்.

    சம்பளம் எவ்வளவு?

    செக்‌ஷன் கண்ட்ரோலர் லெவல் 6 பணிக்கு மாதம் ரூ.35,400 சம்பளம் வழங்கப்படும்.

    தேர்வு முறை:

    கணிணி வழியிலான தேர்வு (சிபிடி) அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    விண்ணப்ப கட்டணம்

    எஸ்சி/எஸ்டி, பெண்கள், பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பதாரர்கள் ரூ.250 செலுத்த வேண்டும். தேர்வு எழுதிய பிறகு முழு கட்டணமும் ரிட்டர்ன் செய்யப்படும். பிற, பொது விண்ணப்பதாரர்கள் ரூ.500 செலுத்த வேண்டும். தேர்வு எழுதிய பிறகு 400 ரூபாய் ரிட்டர்ன் செய்யப்படும்.

    Advertisement
    மதுரையில் நர்ஸ் வேலை.. எக்ஸாம் கிடையாது.. 63 ஆயிரம் வரை சம்பளம்.. எப்படி விண்ணப்பிப்பது?

    தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு குறித்த முழு விவரங்களுக்கு https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளத்தை பார்வையிடவும்.

    விண்ணப்பிக்க வரும் 14.08.2026 கடைசி நாளாகும்.

    English Summary

    Railway job: A recruitment notification has been issued by Indian Railways. A total of 119 Section Controller positions are to be filled. Candidates who hold a degree are eligible to apply for these posts. Selected candidates will receive a monthly salary of Rs. 35,400.