Railway NTPC: இந்தியன் ரயில்வேயில் 1,688 பணியிடங்கள்.. 21,700 சம்பளம்..12 ஆம் வகுப்பு தகுதி! 2 நாள் தான் டைம் இருக்கு

  • சென்னை: இந்தியன் ரயில்வேயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆர்.ஆர்.பி என்.டி.பி.சியில் 12 ஆம் வகுப்பு தகுதி கொண்ட பணிகளுக்கு மொத்தம் 1,688 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழ்நாட்டில் சென்னை ரயில்வே மண்டலத்தில் மட்டும் 168 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.21,700 சம்பளம் வழங்கப்படும். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் 13 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

    Advertisement

    ரயில்வே துறையில் காலியாக பணியிடங்களை ஆர்.ஆர்.பி எனப்படும் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் நிரப்பி வருகிறது. மத்திய அரசின் பொதுத்துறை என்பதால் ரயில்வே பணியில் சேர வேண்டும் என்பது தேர்வர்களின் பெரும் லட்சியங்களில் ஒன்றாக உள்ளது. எனவே ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியமான ஆர்.ஆர்.பி வெளியிடும் தேர்வு அறிவிப்பை தேர்வர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

    Advertisement

    அந்த வகையில் கடந்த மாதம் ஆர்.ஆர்.பி என்.டி.பி.சியில் 12 ஆம் வகுப்பு தகுதி கொண்ட பணிகளுக்கு மொத்தம் 1,688 காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகின. இதற்கான விண்ணப்பப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது.

    பணியிடங்கள் விவரம்:

    கமெர்சியில் டிக்கெட் கிளர்க் - 700, அக்கவுண்ட்ஸ் கிளர்க் கம் டைப்பிஸ்ட் - 200 இடங்கள், ஜூனியர் கிளர்க் கம் டைப்பிஸ்ட் 600 இடங்கள், கிளர்க் - 188 இடங்கள் என மொத்தம் 1,688 காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதில் தமிழகத்தில் சென்னை கோட்டத்தில் மட்டும் 168 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

    Advertisement
    இந்தியன் வங்கியில் 1,500 பணியிடங்கள்.. தமிழ் மொழி தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை.. டிகிரி தகுதி தான்

    கல்வித் தகுதி

    இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    வயது வரம்பு

    01.01.2027 அன்று தேதிப்படி விண்ணப்பதாரர்கள் 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வுகள் அளிக்கப்படும்.

    சம்பளம் எவ்வளவு

    கமெர்சியில் டிக்கெட் கிளர்க் - ரூ.21,700
    அக்கவுண்ட்ஸ் கிளர்க் கம் டைப்பிஸ்ட் - ரூ.19,900
    ஜூனியர் கிளர்க் கம் டைப்பிஸ்ட் - ரூ.19,900
    கிளர்க் - ரூ.19,900

    Advertisement
    சிக்கலில் பெங்களூர்! ஐடி வளர்ச்சியும்.. உள்ளூர் மக்களின் வேலை வாய்ப்பும்! எப்போது நிறைவேறும் கனவு?

    தேர்வு முறை எப்படி?

    இரண்டு கட்ட கணினி வழித் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    விண்ணப்ப கட்டணம்

    விண்ணப்பக் கட்டணம் ஆன்லைன் மூலம் செலுத்தப்பட வேண்டும். பட்டியல் சாதியினர் (SC), பழங்குடியினர் (ST), பெண்கள், EBC, மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கையினர் போன்றோர் ரூ.250 செலுத்த வேண்டும். தேர்வு எழுதிய பிறகு முழுவதும் திரும்ப வழங்கப்படும். மற்ற விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும். தேர்வு எழுதிய பிறகு ரூ.400 திரும்பப் வழங்கப்படும்.

    Advertisement
    Post Office Job: தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலை.. மாதம் 63,000 சம்பளம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க

    விண்ணப்பிக்க கடைசி நாள்

    ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.rrbapply.gov.in/ க்குச் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க வரும் 13 ஆம் தேதி தான் கடைசி நாள் ஆகும். எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பித்துவிடுங்கள்.

    English Summary

    Railway NTPC: A job notification has been released by Indian Railways. A total of 1,688 vacancies are to be filled under the RRB NTPC (Non-Technical Popular Categories) for positions requiring a 12th-grade qualification. In Tamil Nadu, 168 of these vacancies are in the Chennai Railway zone. Selected candidates will receive a monthly salary of Rs. 21,700. The deadline to apply for these positions is the 13th of this month.