சென்னை: ரயில்வேயில் டிக்கெட் கிளர்க் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். கமர்ஷியல் டிக்கெட் கிளர்க், அக்கவுண்ட்ஸ் கிளர்க், ஜூனியர் கிளர்க் உள்ளிட்ட பிரிவுகளில் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.21,700 சம்பளம் வழங்கப்படும். 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
இந்தியாவின் மிகப்பெரிய அரசு நிறுவனமாக இந்திய ரயில்வே உள்ளது. மத்திய அரசில் தனி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ரயில்வே துறையில் லட்சக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். பல ஆயிரக்கணக்கான பணியிடங்கள் ரயில்வேயில் காலியாக உள்ள நிலையில், அவற்றை நிரப்ப வேண்டும் என்று தேர்வர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில், ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகளை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையியில் தற்போது ரயில்வேயில் காலியாக இருக்கக் கூடிய டிக்கெட் கிளர்க் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம். கமர்ஷியல் டிக்கெட் கிளர்க் கமர்ஷியல் டிக்கெட் கிளர்க்: 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 01.01.2027 தேதிப்படி 18 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகைகள் அளிக்கப்படும். டிக்கெட் கிளர்க் பணிக்கு மாதம் ரூ.21,700 சம்பளம் வழங்கப்படும். சிபிடி எனப்படும் இரண்டு கட்ட கணிணி வழி தேர்வு நடைபெறும். டைப்பிங் திறன் கொண்ட பதவிகளுக்கு டைப்பிங் ஸ்கில் தேர்வு நடைபெறும். மருத்துவ பரிசோதனை, சான்றிதழ் சரிபர்ப்பு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்ப கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்சி எஸ்டி பிரிவினர் ரூ.250 செலுத்த வேண்டும். ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 15.10.2026பணியிடங்கள் விவரம்:
அக்கவுண்ட்ஸ் கிளர்க்
ஜூனியர் கிளர்க்
டிரெயின்ஸ் கிளர்க் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.கல்வித் தகுதி:
அக்கவுண்ட்ஸ் கிளர்க் - டைப்பிஸ்ட்: 12 ஆம் வகுப்பு கல்வித் தகுதியுடன் ஆங்கிலம்/ இந்தியில் டைப்பிங் திறன் அவசியம்.
ஜூனியர் கிளர்க்: 12 வகுப்பு + டைப்பிங்க்
டிரெயின்ஸ் கிளர்க்: 12 ஆம் வகுப்பு போதும்வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை.. பழைய ஓய்வூதியம்.. வங்கி ஊழியர்களின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்குமா?
வயது வரம்பு:
சம்பளம்:
அக்கவுண்ட்ஸ் கிளர்க்: ரூ.19,900 சம்பளம் வழங்கப்படும்.
ஜூனியர் கிளர்க்: டைப்பிஸ்ட்: மாதம் ரூ.19,900 சம்பளம் வழங்கப்படும்.
டிரெயின்ஸ் கிளர்க்: மாதம் ரூ.19,900 சம்பளம் வழங்கப்படும்.வடஇந்தியாவின் 4 மாநில ஆண்களுக்கு இனி வேலை கிடையாது.. திடீரென அறிவித்த பெங்களூர் பிரபல நிறுவனம்
தேர்வு முறை:
ஆன்லைன் விண்ணப்ப பதிவு முடியும் நாள் : 13.11.2026 ஆகும்.