சென்னை: இந்தியன் ரயில்வேயில் மெகா வேலைவாய்ப்பு அறிவிப்பினை ஆர்.ஆர்.பி என்டிபிசி வெளியிட்டுள்ளது. டிக்கெட் சூப்பர்வைசர், ஸ்டேஷன் மேனேஜர், சரக்கு ரயில் மேலாளர், ஜூனியர் அக்கவுண்ட் அசிஸ்டண்ட் உள்பட பல்வேறு பிரிவுகளில் 3,477 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.35 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும் என்ற விவரங்களை இங்கு காணலாம்.
ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை ரயில்வே தேர்வு வாரியம் நிரப்பி வருகிறது. மத்திய அரசு பணி என்பதால், ரயில்வே பணிக்காக நாடு முழுவதும் லட்சக்கணக்கான தேர்வர்கள் தயாராகி வருகிறார்கள்.
தேர்வர்கள் பெரிதும் எதிர்பார்த்த அறிவிப்புகளில் ஒன்றான ரயில்வே என்.டி.பி.சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தேர்வு அறிவிப்பு பற்றிய விவரங்களை பார்க்கலாம். தலைமை கமர்ஷியல் - டிக்கெட் சூப்பர்வைசர் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். டைப்பிஸ்ட் பணிக்கு டிகிரி கல்வித் தகுதியுடன் ஆங்கிலம் / இந்தியில் டைப்பிங் செய்யும் திறன் அவசியம். 18 வயது முதல் 33 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைகளின் படி எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது உச்ச வரம்பில் தளர்வு அளிக்கப்படும். அதாவது எஸ்சி / எஸ்டி பிரிவினர் என்றால் 38 வயது வரை விண்ணப்பிக்கலாம். ஒபிசி பிரிவினர் என்றால் 36 வயது வரை உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு கொள்கையின் படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். தலைமை கமர்ஷியல் - டிக்கெட் சூப்பர்வைசர் - ரூ.35,400 கணிணி வழியில் இரண்டு கட்ட தேர்வுகள் நடைபெறும். டைப்பிங் திறன் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வுகள் நடைபெறும். விண்ணப்ப கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். தேர்வு எழுதிய பிறகு ரூ.400 திருப்பி தரப்படும். எஸ்சி/எஸ்டி, பெண்கள், EBC பிரிவினருக்கு ரூ.250 கட்டணம் ஆகும். தேர்வு எழுதிய பிறகு முழுக் கட்டணமும் திருப்பி தரப்படும். விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கும் நாள்: 08.10.2026 தேர்வு அறிவிப்பை பார்க்க Click Hereபணியிடங்கள் விவரம்:
ஸ்டேஷன் மேனேஜர்
சரக்கு ரயில் மேலாளர்
ஜூனியர் அக்கவுண்ட் அசிஸ்டண்ட் - டைப்பிஸ்ட்
சீனியர் கிளர்க் - டைப்பிஸ்ட்
டிராபிக் அசிஸ்டண்ட்
என மொத்தம் 3,477 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.கல்வித் தகுதி:
வயது வரம்பு:
சம்பளம் எவ்வளவு?
ஸ்டேஷன் மேனேஜர் - ரூ.35,400
சரக்கு ரயில் மேலாளர் - ரூ.29,200
ஜூனியர் அக்கவுண்ட் அசிஸ்டண்ட் - டைப்பிஸ்ட்- ரூ.29,200
சீனியர் கிளர்க் - டைப்பிஸ்ட்- ரூ. 29,200
டிராபிக் அசிஸ்டண்ட் - ரூ. 25,500தேர்வு முறை:
முக்கியமான நாட்கள்;
விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.11.2026 ஆகும்.