சேலம் மாவட்டத்தில் வேலை.. 197 காலியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு முடிச்சவங்க விட்றாதீங்க!

  • சேலம்: சேலம் மாவட்ட வட்டாரங்களில் கிராம ஊராட்சி அளவில் காலியாக உள்ள 197 சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். இந்த பணியிடங்களுக்கு யார் யார் விண்ணப்பிக்க முடியும் என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கு காணலாம்.

    Advertisement

    சேலம் மாவட்டத்தில், காலியாக உள்ள சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட விண்ணப்பங்கள் ஆட்சித்தலைவர் திரு.க.இளம்பகவத், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது:-

    Advertisement

    காலிப்பணியிடங்கள் விவரம்:

    சேலம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மகளிர் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் ஆத்தூர் -12, அயோத்தியாப்பட்டணம் 17, கெங்கவல்லி 10, எடப்பாடி 7, காடையாம்பட்டி 8, கொளத்தூர் 7, கொங்கனாபுரம் 5, மகுடஞ்சாவடி 5, மேச்சேரி - 14, நங்கவள்ளி - 7, ஓமலூர் 7, பி.என்.பாளையம் - 16, பனமரத்துப்பட்டி 8, சேலம் 6, சங்ககிரி - 11, தலைவாசல் 17, தாரமங்கலம் 12, வாழப்பாடி 10, வீரபாண்டி 10, ஏற்காடு 8 ஆகிய வட்டாரங்களில் கிராம ஊராட்சி அளவில் காலியாக உள்ள 197 சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    Advertisement

    கல்வித் தகுதி:

    இப்பணிக்கான கல்வித்தகுதி 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலம் நன்றாக எழுதவும், படிக்கவும் மற்றும் கணக்கிடும் திறன் உடையவர்களாகவும் இருத்தல் வேண்டும்.

    வயது வரம்பு:

    இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், வயது 35-க்குள் இருக்க வேண்டும். மேலும், சுய உதவிக்குழு ஊக்குநராக குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும்.

    அனுபவம் என்ன வேண்டும்?

    பிற தகுதிகளாக ஊராட்சி அளவிலான கூட்டமைப்பைச் சார்ந்த பெண் சுய உதவிக்குழு உறுப்பினராக இருத்தல் வேண்டும். மக்கள் நிலை ஆய்வால் கண்டறியப்பட்ட இலக்கு மக்களாக இருத்தல் வேண்டும். கணினி திறன் மற்றும் இரு சக்கர வாகனம் ஓட்ட தெரிந்த, ஓட்டுநர் உரிமம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

    Advertisement

    மேலும், ஆண்ட்ராய்டு கைபேசி (Android phone) வைத்திருப்பவர்களாகவும், SMS மற்றும் whatsapp-ல் செய்தி அனுப்பவும், செயலி இயக்கும் திறன் பெற்றவர்களாகவும் இருத்தல் வேண்டும். வங்கிகளுக்குச் சென்று பரிவர்த்தனைகள் செய்யவும், கடன் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யவும் அனுபவம் உள்ளவர்களாக இருத்தல் வேண்டும். தகவல் தொடர்பு திறன் உடையவர்களாக இருத்தல் வேண்டும்.

    விண்ணப்பிக்க கடைசி தேதி

    காலிப்பணியிடம் உள்ள ஊராட்சிகளில் உள்ள சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர். தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படுவார். தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களின் நகல்களுடன் நேரிலோ அல்லது தபாலிலோ சம்மந்தப்பட்ட ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு 29.05.2026 க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

    Advertisement

    ஊராட்சி அளவிலான காலிப்பணியிடங்கள் குறித்த விபரங்களுக்கு சம்மந்தப்பட்ட வட்டார அளவிலான கூட்டமைப்பு அலுவலகத்தினை அணுகி தகவல் பெற்று பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    English Summary

    Salem district administration has announced recruitment for 197 Community Bank Coordinator posts in village panchayats across the district. Candidates who have completed Class 12 are eligible to apply. The notification has attracted attention among job seekers in rural areas.