எஸ்பிஐ வங்கியில் கிளார்க் வேலை.. வந்தாச்சு அறிவிப்பு.. 1,538 காலியிடங்கள்! மிஸ் பண்ணிடாதீங்க

  • சென்னை: எஸ்பிஐ வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுக்க மொத்தம் 1,538 காலிப்பணியிடங்கள் நிரப்பபடுகின்றன. டிகிரி முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு மாதம் ரூ.64,480 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்கும் மாநிலத்தில் உள்ளூர் மொழி தெரிந்து இருப்பது கட்டாயம்.

    Advertisement

    இந்தியாவில் உள்ள மிகப்பெரிய பொதுத்துறை வங்கி ஸ்டேட் ஆப் பேங்க் ஆப் இந்தியா. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கிளைகளுடன் இயங்கி வரும் இந்த வங்கி மிகவும் லாபகரமாக இயங்கும் வங்கியாகும். இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இந்த வங்கிக்கு கிளைகள் உள்ளன. எஸ்பிஐ வங்கியை பொறுத்தவரை அரசு பொதுத்துறை வங்கி என்பதால் இந்த வங்கியில் வேலை பார்க்க வேண்டும் என்பது நாடு முழுவதும் உள்ள பல லட்சக்கணக்கான தேர்வர்களின் லட்சியங்களில் ஒன்றாக உள்ளது.

    Advertisement

    இதனால் எஸ்பிஐ வெளியிடும் தேர்வு அறிவிப்பை தேர்வர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருப்பார்கள். தேர்வர்கள் எதிர்பார்த்த ஜாக்பாட் அறிவிப்பை எஸ்பிஐ தற்போது வெளியிட்டுள்ளது. மொத்தம் 1,538 காலியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான கல்வித் தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

    பணியிடங்கள் விவரம்:

    ஜூனியர் அசோசியேட்ஸ் (வாடிக்கையாளர் உதவி & சேல்ஸ்) - மொத்தம் 1,538 காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

    எஸ்சி பிரிவினருக்கு - 207, எஸ்டி பிரிவினருக்கு 1,219, ஓபிசி பிரிவினருக்கு 112 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

    மண்டல வாரியாக காலியிடங்கள்:

    தமிழ்நாடு - 68
    ஆந்திரா - 88,
    கர்நாடாகா - 120
    மத்தியப் பிரதேசம் - 134
    சத்தீஸ்கர் - 26
    ஒடிசா - 111
    சண்டிகர் யூனியன் பிரதேசம் - 22
    ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேசம் - 42
    இமாச்சலப் பிரதேசம் - 11

    Advertisement

    பஞ்சாப் - 18
    தெலுங்கானா - 32
    ராஜஸ்தான் - 106
    மேற்கு வங்கம் - 55
    உத்தரப் பிரதேசம் - 35
    மகாராஷ்டிரா - 165
    டெல்லி - 17
    குஜராத் - 289
    அஸ்ஸாம் - 39
    திரிபுரா - 22
    பீகார் - 12
    ஜார்க்கண்ட் - 133

    கல்வித் தகுதி:

    31.12.2026 அன்றைய தேதி நிலவரப்படி ஏதாவது ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்கும் மாநிலத்தில் உள்ளூர் மொழி தெரிந்து இருப்பது கட்டாயம்.

    வயது வரம்பு:

    வயது வரம்பை பொறுத்தவரை 20 வயது முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். அதாவது விண்ணப்பதாரர்கள் 02.04.1998 க்கு முன்பாகவோ 01.04.2006 தேதிக்கு பிறகோ பிறந்தவராக இருத்தல் கூடாது. அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.

    Advertisement

    எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும், ஓபிசி பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 13 ஆண்டுகளும், எஸ்சி/எஸ்டி பிரிவை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 15 ஆண்டுகளும் சலுகைகள் அளிக்கப்படும்.

    சம்பளம் & தேர்வு முறை:

    தேர்வு செய்யப்படும் ஜூனியர் அசோசியேட் ஊழியர்களுக்கு மாதம் ரூ.24,050 முதல் 64,480 வரை சம்பளம் வழங்கப்படும்.

    தேர்வு முறையை பொறுத்தவரை முதல் நிலை தேர்வு, மெயின் தேர்வு & உள்ளூர் மொழித்திறன் தேர்வு ஆகியவை அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

    தேர்வு மையங்கள்:

    சென்னை, கோவை, கடலூர், ஈரோடு, காஞ்சிபுரம், மதுரை, நாகர்கோவில் / கன்னியாகுமரி, நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருச்சி, நெல்லை, திருப்பூர், வேலூர், விருதுநகர், விழுப்புரம் ஆகிய இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.

    Advertisement

    விண்ணப்ப கட்டணம்:

    தேர்வர்கள் ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். கட்டணமும் ஆன்லைனில் செலுத்த வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி, மாற்றுத்திரனாளிகள் உள்ளிட்ட பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.

    விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கிய நாள்: 07.08.2026 ஆகும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.08.2026 ஆகும்.

    அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பை படிக்க: https://sbi.bank.in/webfiles/uploads/files_2627/08/JA_2026_Backlog_Detailed_Advt_ENG.pdf

    English Summary

    SBI Bank Job: A recruitment notification has been issued by SBI. A total of 1,538 vacancies across the country are being filled. Candidates who have completed a degree are eligible to apply for these positions. Selected employees will receive a monthly salary of up to ₹64,480. Proficiency in the local language of the state where the candidate is applying is mandatory.