சென்னை: எஸ்பிஐ வங்கியில் மேனேஜர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 49 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.93 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி என்ன? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக உள்ள எஸ்பிஐ வங்கியில், இந்தியா மட்டும் இன்றி வெளிநாடுகளிலும் கிளைகள் உள்ளன. எஸ்பிஐ வங்கியில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்படுகின்றன.
பொதுத்துறை வங்கி என்பதால் நல்ல சம்பளம், பணி பாதுகாப்பு, சலுகைகள் கிடைக்கும். எனவே எஸ்பிஐ வங்கியில் வெளியிடும் தேர்வு அறிவிப்பை எதிர்பார்த்து தேர்வர்கள் பலரும் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கான அறிவிப்பு ஒன்றை தான் எஸ்பிஐ வெளியிட்டுள்ளது. மொத்தம் 49 மேனேஜர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. சட்டப் பிரிவில் 49 நிரந்தர பணியிடங்களை நிரப்பப்படுகின்றன. தேர்வு செய்யப்படுபவர்கள் இந்தியா முழுவதும் உள்ள எஸ்பிஐ கிளைகள் மற்றும் அலுவலகங்களில் பணியமர்த்தப்படலாம். * உதவி மேலாளர் (Law) - 20 பணியிடங்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டப்படிப்பு (LLB) முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். இதில், 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த சட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படலாம். பணி அனுபவமும் கேட்கப்பட்டுள்ளது. உதவி மேலாளர் பணியிடம்: பார் கவுன்சிலில் பதிவு செய்யப்பட்ட வழக்கறிஞராக 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும், அல்லது வணிக வங்கியின் சட்டப் பிரிவில் 2 ஆண்டுகள் சட்ட அதிகாரியாக பணியாற்றிய அனுபவம் இருத்தல் வேண்டும். அல்லது மேற்கண்ட இரண்டின் இணைந்த அனுபவம் இருக்க வேண்டும். துணை மேலாளர் பணியிடம்: பார் கவுன்சிலில் பதிவு செய்யப்பட்ட வழக்கறிஞராக 4 ஆண்டுகள் அனுபவம் இருத்தல் வேண்டும். அல்லது வணிக வங்கியின் சட்டப் பிரிவில் 4 ஆண்டுகள் சட்ட அதிகாரியாக பணியாற்றிய அனுபவம் அல்லது மேற்கண்ட இரண்டின் இணைந்த அனுபவம் இருக்க வேண்டும். வயது வரம்பை பொறுத்தவரை 14.07.2026 அன்று தேதிப்படி கணக்கில் கொள்ளப்படும். உதவி மேலாளர் பணியிடத்திற்கு குறைந்தபட்சம் 25 வயதும் அதிகபட்சம் 32 வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும். துணை மேலாளர் பதவிக்கு குறைந்தபட்சம் 25 வயதும், அதிகபட்சம் 35 வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்சி / எஸ்டி - 5 ஆண்டுகள், ஓபிசி (NCL) - 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் அரசு விதிகளின்படி கூடுதல் தளர்வு அளிக்கப்படும். * உதவி மேலாளர் - மாதம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். * எஸ்சி / எஸ்டி / மாற்றுத்திறனாளிகள் / முன்னாள் ராணுவத்தினர் - கட்டணம் இல்லை எஸ்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளதளத்தில், Careers பகுதியில் சென்று, ஆன்லைன் மூலம் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். * ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கிய நாள்: 24.06.2026 அதிகாரப்பூர்வை தேர்வு அறிவிப்பினை படிக்க: https://sbi.bank.in/documents/77530/57941334/24062026_ADV_LAW_SC0_2026-27_02.pdf/95a7dec7-2daa-6894-f32a-40b18bec9ca1?t=1782283076945காலிப்பணியிட விவரம்:
* துணை மேலாளர் (Law) - 29 பணியிடங்கள் என மொத்தம் 49 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.கல்வித் தகுதி
வயது வரம்பு
சம்பளம் எவ்வளவு?
* துணை மேலாளர் - மாதம் ரூ.64,820 முதல் ரூ.93,960 வரைதேர்வு முறை
விண்ணப்பக் கட்டணம்
* மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் - ரூ.750. விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைன் மூலமாக கட்ட வேண்டும்.விண்ணப்பிக்கும் முறை
* விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.07.2026 ஆகும்.