எஸ்பிஐ கிளர்க் வேலை நோடிபிகேஷன் எப்போது? எந்த நேரமும் வரலாம்.. ரெடியா இருங்க! லேட்டஸ்ட் அப்டேட்


  • சென்னை: எஸ்பிஐ வங்கியில் கிளர்க் வேலைக்கான (SBI Clerk job) நோட்டிபிகேஷன் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த பணியிடங்களுக்கான முறையான அறிவிப்பு எந்த நேரமும் வெளியாகலாம் என்பதால், விண்ணப்பிக்க தேவையான கல்வி சான்று விவரங்களை தயராக வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். எஸ்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தையும் அவ்வப்போது செக் செய்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறது.

    Advertisement

    நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உள்ளது. நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான கிளைகளுடன் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா இயங்கி வருகிறது. ஸ்டேட் வங்கியை பொறுத்தவரை பிற பொதுத்துறை வங்கிகளை போல ஐபிபிஎஸ் வாயிலாக ஆட்சேர்ப்பு நடத்தாமல் தனியாக தேர்வு நடத்தி ஆட்சேர்ப்பு நடத்தி வருகிறது.

    Advertisement

    மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் என்பதால் எஸ்பிஐ வங்கி ஊழியர்களுக்கு கை நிறைய சம்பளம், சலுகைகள் உள்ளிட்டவை கிடைக்கின்றன. இதன் காரணமாக இந்த தேர்வு அறிவிப்புக்கு தேர்வர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த ஆண்டுக்கான எஸ்பிஐ கிளர்க் 2026 தேர்வு அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அறிவிப்பு எப்போது வெளியாகும்?

    ஜூனியர் அசோசியேட்ஸ் (கஸ்டமர் சப்போர்ட் & சேல்ஸ்) பணியிடங்கள் இந்த அறிவிப்பில் வெளியிடப்படும். எஸ்பிஐ இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடாவிட்டாலும், வழக்கமான தேர்வு கால அட்டவணையை பின்பற்றி விரைவில் அறிவிப்பை வெளியிடும் என்ற எதிர்பார்ப்பு தேர்வர்கள் மத்தியில் எழுந்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பருக்கு இடையில் தேர்வு அறிவிப்பானது வெளியாகியிருந்தது.

    Advertisement

    அறிவிப்பு வெளியானதும் ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கிவிடும். எனவே, எஸ்பிஐயின் தேர்வு அறிவிப்புக்காக காத்திருக்கும் தேர்வர்கள், விண்ணப்பிக்க தேவையான கல்வி சான்று விவரங்களை தயராக வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். எஸ்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தையும் அவ்வப்போது செக் செய்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறது.

    கல்வித் தகுதி என்ன?

    எஸ்பிஐ ஜூனியர் அசோசியேட் பணிக்கு விண்ணப்பிக்க ஏதாவது ஒரு டிகிரி போதும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழி தெரிந்து இருக்க வேண்டும். உள்ளூர் மொழியை எழுத படிக்க, பேச தெரிந்து இருப்பது அவசியம்.

    தேர்வு முறை எப்படி?

    தேர்வு முறையை பொறுத்தவரை, முதல் நிலை தேர்வு, மெயின் தேர்வு, உள்ளூர் மொழித்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவை அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத்தேர்வு கிடையாது. எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றால் உடனே வேலை கிடைக்கும். தேர்வு அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்ப்பக்கப்படுவதால் வங்கி தேர்வுக்கு தயாராகி வரும் தேர்வர்கள் கூடுதல் கவனத்துடன் தேர்வுக்கு தயாராகி வருவதோடு, தேர்வு அறிவிப்பின் மீது ஒரு கண் வைத்துக்கொள்ளுங்கள்.

    English Summary

    SBI Clerk job Notification: State Bank of India is expected to release its Clerk Recruitment notification soon, raising hopes among banking aspirants. Candidates are eagerly waiting for the official announcement, which will include vacancy details, eligibility, application dates, and the examination schedule.