SBI Job: எஸ்பிஐ வங்கியில் அதிகாரி ஆகனுமா? 207 காலிப்பணியிடங்கள்! யார் யார் விண்ணப்பிக்கலாம்?

  • சென்னை: எஸ்பிஐ வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 207 சிறப்பு அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இது குறித்த விவரங்களை இங்கு விரிவாக காணலாம்.

    Advertisement

    இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி வருகிறது. கிளர்க் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நடைமுறைகள் சென்று கொண்டு இருக்கும் நிலையில், தற்போது சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

    Advertisement

    பணியிடங்கள் விவரம்:

    மண்டல தலைவர் (ரீடெயில்) - 01
    பிராந்திய தலைவர் - 05
    ரிலேஷன்ஷிப் மேனேஜர் டீம் லீடு - 24
    இன்வெஸ்ட்மெண்ட் ஸ்பெஷலிஸ்ட் - 09
    இன்வெஸ்ட்மெண்ட் ஆபிசர் - 04
    விபி வெல்த் - 91
    ஏவிபி வெல்த - 73

    கல்வித் தகுதி:

    பணியிடங்களுக்கு தகுந்தபடி மாறுபடும். ஏதாவது ஒரு பட்டம், முதுகலை பட்டம்/ பிஜி டிப்ளமோ உள்ளிட்ட படிப்புகள் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். உதாரணத்திற்கு Zonal Head (மண்டல தலைவர்) பணிக்கு அரசு அங்கீகரித்த கல்வி நிலையத்தில் இருந்து பட்டம் முடித்து இருக்க வேண்டும்.

    ஏம்பிஏ (வங்கி, நிதி, மார்க்கெட்டிங்) 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும். குறைந்தபட்சம் வங்கி துறையில் 15 ஆண்டுகள் பணியாற்றியிருப்பது அவசியம்.

    Advertisement

    ஏவிபி வெல்த் பணிக்கு குறைந்தபட்சம் பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும். ஃபைனான்ஸ், மார்க்கெட்டிங், வங்கி உள்ளிட்ட பாடப்பிரிவுகளை கொண்ட முதுகலை பட்டம் முடித்து இருந்தால் கூடுதல் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் அளிக்கப்படும். மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

    வயது வரம்பு:

    மண்டல தலைவர் (Zonal Head -ரீடெயில்) - 35 வயது முதல் 50 வயதுக்குள் இருப்பவர்கள்
    பிராந்திய தலைவர் - 35 வயது முதல் 50 வயதுக்குள் இருப்பவர்கள்
    ரிலேஷன்ஷிப் மேனேஜர் டீம் லீடு - 28-42 வயது வரை
    இன்வெஸ்ட்மெண்ட் ஸ்பெஷலிஸ்ட் - 28-42 வயது வரை
    இன்வெஸ்ட்மெண்ட் ஆபிசர் - 28-40 வயது வரை
    விபி வெல்த் - 26- 42 வயது வரை
    ஏவிபி வெல்த - 23-வயது முதல் 35 வயது வரை

    Advertisement

    தேர்வு முறை:

    தகுதியான விண்னப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்ப கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

    தேர்வு அறிவிப்பை படிக்க: https://recruitment.sbi.bank.in/crpd-sco-2026-27-23/apply

    English Summary

    SBI Job: A recruitment notification has been released by SBI. A total of 207 Specialist Officer positions are to be filled. Candidates who have completed their degree are eligible to apply for these posts. Here are the details.