எஸ்பிஐ வங்கியில் வேலை.. டிகிரி முடித்தவர்களுக்கு செம சான்ஸ்.. 7,150 பணியிடங்கள்.. தேதி முடிய போகுது

  • சென்னை: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில், 7,150 அப்ரெண்டீஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க இன்னும் சில நாட்களே உள்ளதால், தகுதியானவர்கள் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

    Advertisement

    நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக எஸ்.பி.ஐ உள்ளது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா எனப்படும் இந்த வங்கிக்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் கிளைகள் உள்ளன. ஆயிரக்கணக்கான ஊழியர்களுடன் செயல்பட்டு வரும் இந்த வங்கி பொதுத்துறை வங்கிகளில் மிகவும் லாபகரமாக செயல்படும் வங்கி என்ற பெயரை பெற்றுள்ளது.

    Advertisement

    பணியிடங்கள் விவரம்:

    எஸ்பிஐ வங்கியில் அப்ரெண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிகிரி முடித்த இளம் பட்டதாரிகளுக்கு ஊதியத்துடன் கூடிய பயிற்சி என்ற அடிப்படையில் இந்த பயிற்சி பணியிடங்களை சமீப காலமாக பல்வேறு வங்கிகளும் அறிவித்து வருகின்றன. அந்த வகையில் எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ள காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க சில நாட்களே அவகாசம் உள்ளது. எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பித்து விடுங்கள். இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்ற விவரங்களை பார்க்கலாம்

    அப்ரெண்டீஸ் பயிற்சி பணியிடங்கள் 7,150 உள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் 396 காலியிடங்கள் உள்ளன.

    Advertisement

    மாவட்ட வாரியாக விவரம்:

    அரியலூர் - 06
    செங்கல்பட்டு - 15
    சென்னை - 33
    கோயம்புத்தூர் - 15
    கடலூர் - 10
    தர்மபுரி - 05
    திண்டுக்கல் - 10
    ஈரோடு - 10
    கள்ளக்குறிச்சி - 05
    காஞ்சிபுரம் - 12

    கன்னியாகுமரி - 12
    கரூர் - 05
    கிருஷ்ணகிரி - 10
    மதுரை - 18
    மயிலாடுதுறை - 05
    நாகப்பட்டினம் - 10
    நாமக்கல் - 08
    வேலூர் - 06

    விழுப்புரம் - 15
    விருதுநகர் - 10
    நீலகிரி - 10
    பெரம்பலூர் - 05
    புதுக்கோட்டை - 05
    இராமநாதபுரம் - 05
    ராணிப்பேட்டை - 05

    சேலம் - 15
    சிவகங்கை - 05
    தென்காசி - 05
    தஞ்சாவூர் - 12
    தேனி - 10
    திருவள்ளூர் - 18
    திருவண்ணாமலை - 10
    திருவாரூர் - 08
    திருச்சிராப்பள்ளி - 18
    திருநெல்வேலி - 12
    திருப்பத்தூர் - 08
    திருப்பூர் - 10
    தூத்துக்குடி - 15

    Advertisement


    கல்வித்தகுதி:

    அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் முடித்து இருக்க வேண்டும். வயது வரம்பை பொறுத்தவரை 20 வயது முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.

    சம்பளம்:

    மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும்.

    தேர்வு முறை:

    எழுத்து தேர்வு, உள்ளூர் மொழித்திறன் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். தமிழகத்தில் உள்ள பணியிடத்திற்கு தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

    விண்ணப்ப கட்டணம்:

    தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ.300 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்டோருக்கு கட்டணம் கிடையாது. ஆன்லைன் வழியாக கட்டணம் செலுத்தலாம்.

    Advertisement

    தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://sbi.bank.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வரும் 15.06.2026 கடைசி நாளாகும். தேர்வு அறிவிப்பினை முழுமையாக படித்து உறுதி செய்த பிறகு தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.

    தேர்வு அறிவிப்பினை படிக்க: Click Here

    English Summary

    SBI Jobs: The State Bank of India (SBI) has announced recruitment for 7,150 Apprentice posts across the country, offering a great opportunity for fresh graduates. The apprenticeship comes with a stipend and aims to provide practical banking experience. With the application deadline approaching soon, eligible candidates are advised to submit their applications without delay. Tamil Nadu alone has 396 vacancies.