சென்னை: எஸ்பிஐ வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ப்ரொபேஷனரி ஆபீசர் (PO) பதவிகளில் மொத்தம் 1500 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு எதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இது குறித்த முழுமையான விவரங்களை இங்கு காணலாம்.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ இந்தியா மட்டும் இன்றி வெளிநாடுகளிலும் பல்வேறு கிளைகளுடன் இயங்கி வருகிறது. எஸ்பிஐ வங்கியில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்ப்படுகின்றன. அந்த வகையில் தற்போது எஸ்பிஐ வங்கியில் 1,500 ப்ரொபேஷனரி ஆபீசர் (PO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பொதுத்துறை வங்கி என்பதால் நல்ல சம்பளம், பணி பாதுகாப்பு, சலுகைகள் கிடைக்கும். எனவே எஸ்பிஐ வங்கியில் வெளியிடும் தேர்வு அறிவிப்பை எதிர்பார்த்து ஆர்வமுடன் தேர்வர்கள் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு சூப்பரான வாய்ப்பாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி என்ன? என்பது பற்றி இங்கே பார்க்கலாம். நாடு முழுவதும் மொத்தம் 1,500 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இறுதியாண்டு மாணவர்களும் நிபந்தனைகளுடன் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். 01.04.2026 தேதியின்படி 21 முதல் 30 வயது வரை உடையவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். அரசு விதிகளின்படி இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு வயது தளர்வு வழங்கப்படும். ஆட்சேர்ப்பு 3 கட்டங்களாக நடைபெறும்: * முதற்கட்டத் தேர்வு (Preliminary Examination) இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூன் 18 முதல் தொடங்கியுள்ள நிலையில், ஜூலை 8, 2026 வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் இந்தியாவின் எந்த மாநிலத்திலும் பணியமர்த்தப்படலாம். எஸ்பிஐ அதிகாரப்பூர்வ இணையதளத்தளத்தில் SBI PO Recruitment 2026 இணைப்பினை கிளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும். மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணைப் பயன்படுத்தி பதிவு செய்ய வேண்டும். எஸ்பிஐ ப்ரொபேஷனரி ஆபீசர் (PO) 2026 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது, முதற்கட்ட மற்றும் முதன்மைத் தேர்வுகளுக்கான மையங்களை தேர்வர்கள் கவனமாக தேர்வு செய்ய வேண்டும். சென்னை சென்னை1,500 பணியிடங்கள்
கல்வித்தகுதி:
வயது வரம்பு:
தேர்வு முறை:
* முதன்மைத் தேர்வு (Main Examination)
* உளவியல் மதிப்பீடு (Psychometric Test), குழு பயிற்சி (Group Exercise) மற்றும் நேர்காணல் (Interview)முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்கும் முறை:
தமிழ்நாட்டில் முதற்கட்டத் தேர்வு மையங்கள்:
கோயம்புத்தூர்
திண்டுக்கல்
கிருஷ்ணகிரி
மதுரை
நாகர்கோவில்
நாமக்கல்
பெரம்பலூர்
சேலம்
தஞ்சாவூர்
திருச்சிராப்பள்ளி
திருநெல்வேலி
தூத்துக்குடி
வேலூர்தமிழ்நாட்டில் முதன்மைத் தேர்வு மையங்கள்:
மதுரை
திருநெல்வேலி.