SI Job: சப் இன்ஸ்பெக்டர் வேலை.. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்! எஸ்எஸ்சி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு

  • சென்னை: எஸ்.எஸ்.சியில் சப் இன்ஸ்பெக்டர் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. டெல்லி காவல்துறையில் உதவி ஆய்வாளர், சிஆர்பிஎஃப் ஆண்கள், பெண்கள் என பல்வேறு பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பபடுகின்றன. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ. 1,12,400 வரை சம்பளம் வழங்கப்படும். இது குறித்த முழு விவரங்களை இங்கு காணலாம்.

    Advertisement

    மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான எஸ்.எஸ்.சி மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி வருகிறது. ஜூனியர் அசிஸ்டண்ட் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன. இந்த நிலையில், சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

    Advertisement

    பணியிடங்கள் விவரம்:

    டெல்லி காவல்துறையில் உதவி ஆய்வாளர் (நிர்வாகம்) -
    பொதுப் பிரிவு - 184 பணியிடங்கள்
    (முன்னாள் ராணுவத்தினர் ) - 12
    முன்னாள் ராணுவத்தினர் (சிறப்புப் பிரிவு) - 09

    டெல்லி காவல்துறையில் உதவி ஆய்வாளர் (நிர்வாகம்) - பெண்கள் -
    பொதுப் பிரிவு - 112
    மத்திய ஆயுதக் காவல் படைகளில் (CAPFs) உதவி ஆய்வாளர் (பொதுப் பணி - GD)
    சிஆர்பிஎப் ஆண்கள் - 225
    சிஆர்பிஎப் பெண்கள் - 29

    பிஎஸ்எப் ஆண்கள் - 435
    பிஎஸ்எப் பெண்கள் - 22

    Advertisement

    இந்தோ திபெத் படை- ஆண்கள் - 159
    பெண்கள் - 28

    சிஐஎஸ்.எப் ஆண்கள் - 200
    சிஐஎஸ்.எப் பெண்கள் - 50
    எஸ்.எஸ்.பி ஆண்கள் - 154
    எஸ்.எஸ்.பி பெண்கள் - 18
    உதவி ஆய்வாளர் (தீயணைப்புப் பிரிவு) சிஐஎஸ்எப் ஆண்கள் - 234

    கல்வித் தகுதி:

    அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தீ அணைப்புத்துறை பிரிவை சேர்ந்த பணியிடங்களுக்கு இயற்பியல், வேதியியல், கணிதம் உள்ளிட்ட பிரிவுகளில் பட்டம் முடித்து இருக்க வேண்டும். மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரிக்கல், ஆட்டோமொபைல், கெமிக்கல், மைனிங், ஏரோநெட்டிக்கல் உள்ளிட்ட பிரிவுகளில் டிப்ளமோ என்ஜினியரிங் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

    Advertisement

    வயது வரம்பு:

    01.08.2026 தேதிப்படி 20 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அதாவது, 02.08.2001 -க்கு முன்பாகவோ, 01.08.2006 -க்கு பிறகோ பிறந்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது.

    எஸ்.ஐ (FIRE) பணிக்கு 18 முதல் 30 வயது வரை விண்ணப்பிக்கலாம். 02.08.1996 க்கு முன்போ 01.08.2008 க்கு பிறகே பிறந்தவர்கள் விண்ணப்பிக்க முடியது. அரசு விதிமுறைகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. அதாவது எஸ்சி எஸ்டி பிரிவினர் என்றால் 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினர் என்றால் 3 ஆண்டுகளும் என தளர்வுகள் அழிக்கப்படும்.

    Advertisement

    சம்பளம் எவ்வளவு?

    எஸ்.ஐ (ஜிடி): ரூ.35,400 முதல் ரூ. 1,12,400 வரை சம்பளம் வழங்கப்படும்.

    தேர்வு முறையை பொறுத்தவரை எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு, இரண்டாம் கட்ட எழுத்து தேர்வு மற்றும் மருத்துவ சான்று அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.

    நாடு முழுவதும் இதற்கான தேர்வு நடைபெறும். தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை, வேலூர், கிருஷ்ணகிரி ஆகிய நகரங்களில் தேர்வு நடைபெறும்.

    விண்ணப்ப கட்டணம்:

    தகுதியுள்ள தேர்வர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்னப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. விண்ணப்பிக்க வரும் 30.09.2026 கடைசி நாளாகும்.

    Advertisement

    தேர்வு அறிவிப்பை படிக்க: https://ssc.gov.in/

    English Summary

    SI Job: SSC has released a recruitment notification for the post of Sub-Inspector. Vacancies are being filled for the position of Sub-Inspector in the Delhi Police, as well as in the CRPF (for both men and women). Selected candidates will receive a monthly salary of up to ₹1,12,400. Full details regarding this recruitment can be found here.