சென்னை, மதுரையில் வேலை.. தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! 4,308 பணியிடங்கள்.. விட்றாதீங்க

  • சென்னை: இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 4,308 அப்ரெண்டீஸ் பணியிடங்களை நிரப்ப தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் பணியமர்த்தப்படுவார்கள். 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.

    Advertisement

    இந்திய ரயில்வே துறை நாட்டின் மிகப்பெரிய அரசு துறை நிறுவனமாக உள்ளது. லட்சக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றும் ரயில்வே துறையில், காலியிடங்களை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் நடத்துகிறது. ஆர்.ஆர்.பி எனப்படும் இந்த ஆட்சேர்ப்பு வாரியம் மண்டல வாரியாக காலியிடங்களுக்கு ரயில்வே விதிகளின் படி தேர்வு அறிவிப்பினை வெளியிட்டு நிரப்பி வருகிறது.

    Advertisement

    அந்த வகையில், தற்போது அப்ரெண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்களுக்கான அறிவிப்பையும் ரயில்வே வெளியிட்டுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு போன்ற தகவல்களை விரிவாக பார்க்கலாம்.

    பணியிடங்கள் விவரம்:

    அப்ரெண்டீஸ் பயிற்சி பணியிடங்கள் மொத்தம் 4,308 காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன. ஃபிட்டர், பெயிண்டர், வெல்டர், மெடிக்கல் லேப் டெக்னிஷியன் (ரோடியோலாஜி, கார்டியோலாஜி) எலக்ட்ரிஷியன், ஸ்டெனோகிராபர் உள்ளிட்ட பிரிவுகளில் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

    சென்னை, மதுரை, திருச்சி, பெரம்பூர், கோவை, அரக்கோணம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் தேர்வு செய்யப்படுபவர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.

    Advertisement

    கல்வித் தகுதி:

    பத்தாம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். துறை சார்ந்த பிரிவில் ஐடிஐ முடித்து இருக்க வேண்டும். ஃபிரஷர் கேட்டகிரியில் விண்ணப்பிப்பவர்கள் எஸ்.எஸ்.எல்.சி முடித்து இருந்தால் போதும். குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    பயிற்சி காலம்:

    வெல்டர் - 1 ஆண்டு 3 மாத காலம்,
    ஃபிட்டர், பெயிண்டர் - 2 ஆண்டுகள்
    மெடிக்கல் லேப் - 1 ஆண்டுகள் 3 மாத அனுபவம்

    வயது வரம்பு:

    27.09.2026 அன்று தேதிப்படி 15 வயது முதல் 22 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.

    Advertisement

    ஊதியம் எவ்வளவு:

    ஃபிரஷர் ( Fresher) - மாதம் ரூ.8,200 ஊதியமாக வழங்கப்படும்.
    எக்ஸ் ஐடிஐ (கல்வி தகுதி பணிகளுக்கு) - ரூ.9,600
    12 ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட பணிகளுக்கு - ரூ.9,600

    தேர்வு முறை:

    மெரிட் லிஸ்ட், சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியும் ஆர்வமும் இருப்பவர்கள் தேர்வு அறிவிப்பை படித்து உறுதி செய்து கொண்டு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்கலாம். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. விண்ணப்பிக்க வரும் 27.09.2026 கடைசி நாளாகும்.

    Advertisement

    தேர்வு அறிவிப்பை படிக்க: https://sr.indianrailways.gov.in/

    English Summary

    Southern Railway has issued a notification to fill 4,308 vacant apprentice positions within Indian Railways. Candidates selected for these roles will be posted in locations including Chennai, Madurai, Coimbatore, and Trichy. Individuals who have completed Class 10 or Class 12 are eligible to apply for these positions.