SSC Job: மத்திய அரசு துறைகளில் வேலை.. 12,256 காலியிடங்கள்.. எஸ்எஸ்சி வெளியிட்ட மெகா அறிவிப்பு.. விட்றாதீங்க

  • சென்னை: தேர்வர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் அறிவிப்புகளில் ஒன்றாக இருக்க கூடிய எஸ்.எஸ்.சி சிஜிஎல் (SSC - CGL) தேர்வு அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையமான எஸ்.எஸ்.சி வெளியிட்டுள்ளது. 12,256 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. டிகிரி முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு, உள்ளிட்ட விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.

    Advertisement

    ஸ்டாப் செலக்‌ஷன் கமிஷன் எனப்படும் எஸ்.எஸ்.சி மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பணியை மேற்கொள்கிறது. எஸ்.எஸ்.சி வெளியிடும் தேர்வு அறிவிப்புகளில் சிஜிஎல் பிரிவுகளில் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    Advertisement

    மத்திய அரசு பணி கனவுடன் காத்திருக்கும் பல லட்சம் தேர்வர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் அறிவிப்புகளில் ஒன்றாக இது உள்ளது. மொத்தம் 12,256 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வி தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

    பணியிடங்கள் விவரம்:

    உதவி தணிக்கை அதிகாரி (மத்திய பிரிவு) - குரூப் "B" (C&AG)
    உதவி பிரிவு அதிகாரி - குரூப் "B" (மத்திய செயலக சேவை, உளவுத்துறை, ரயில்வே அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம், உதவியாளர் / உதவி பிரிவு அதிகாரி - குரூப் "B" (பிற அமைச்சகங்கள் / துறைகள் / அமைப்புகள்) வருமான வரி ஆய்வாளர்)

    Advertisement

    (CBDT) மத்திய கலால் ஆய்வாளர் - குரூப் "B" (CBIC)
    தடுப்பு அதிகாரி ஆய்வாளர் - குரூப் "B" (CBIC)
    பரிசோதகர் ஆய்வாளர் - குரூப் "B" (CBIC)
    உதவி அமலாக்க அதிகாரி - குரூப் "B" (ED),
    வருவாய் துறை துணை ஆய்வாளர் - குரூப் "B" (CBI)
    ஆய்வாளர் - குரூப் "B" (அஞ்சல் துறை)
    ஆய்வாளர் - குரூப் "B" (மத்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை)
    தணிக்கையாளர் - குரூப் "C" (C&AG அலுவலகங்கள்)
    அஞ்சல் உதவியாளர் குரூப் "C" (அஞ்சல் துறை)
    வரி உதவியாளர் - குரூப் "C" (CBDT)

    Advertisement

    உள்ளிட்ட பிரிவுகளில் மொத்தம் 12,256 - காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

    கல்வித் தகுதி:

    அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    வயது வரம்பு:

    18 வயது முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 02.8.1996-க்கு முன்பாகவோ 01-08.2008-க்கு பிறகே பிறந்தவராக இருத்தல் கூடாது. பணியிடங்களுக்கு தகுந்தபடி வயது வரம்பில் சில மாறுதல்களும் உள்ளன. இதுபற்றிய விவரங்களை தேர்வு அறிவிப்பில் பார்த்து செய்து கொள்ளலாம்.

    தேர்வு முறை:

    டையர் 1, 2 என இரண்டு கட்ட தேர்வுகள் நடைபெறும். கணிணி வழியில் இந்த தேர்வுகள் நடைபெறும். இதில் தேவையான கட் ஆஃப் பெறும் மாணவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள்.

    Advertisement

    தேர்வு மையங்கள்:

    நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் தேர்வு மையம் அமைக்கப்படும். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை, வேலூர் ஆகிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.

    விண்ணப்ப கட்டணம்:

    பொது பிரிவினருக்கு ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.

    முக்கியமான நாட்கள்:

    ஆன்லைன் விண்ணப்ப இணையதளம் தொடங்கும் நாள்: 21.05.2026
    ஆன்லைன் விண்ணப்ப இணையதளம் முடிவடையும் நாள்: 22.06.2026
    விண்ணப்பம் திருத்தம் செய்வதற்கான கால அவகாசம்: 29.06.2026 முதல் 01.07.2026 வரை (23:00 மணி வரை)
    Tier-I - (கணினி வழித் தேர்வு) - நடைபெறும் மாதம்: ஆகஸ்ட் - செப்டம்பர், 2026 (உத்தேசமானது)
    Tier-II (கணினி வழித் தேர்வு) - நடைபெறும் மாத: டிசம்பர், 2026 (உத்தேசமானது)

    Advertisement

    தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பினை படித்து உறுதி செய்து கொண்ட பிறகு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பினை படிக்க: https://ssc.gov.in/home/apply

    English Summary

    SSC Job: The Staff Selection Commission (SSC)—the central government's recruitment agency—has released the notification for the SSC CGL (Combined Graduate Level) examination, an announcement highly anticipated by aspirants. A total of 12,256 vacancies are to be filled through this recruitment drive.