சென்னை: உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 250 கோர்ட் அசிஸ்டண்ட் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடங்களுக்கு டிகிரி முடித்து இருப்பவர்கள் விண்ணப்பிக்க முடியும். சம்பளத்தை பொறுத்தவரை மாதம் ரூ.35,400 சம்பளம் வழங்கப்படும். இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது உள்ளிட்ட விவரங்களை காணலாம்.
நாட்டின் உயரிய நீதி அமைப்பாக விளங்கும் உச்ச நீதிமன்றம் தலைநகர் டெல்லியில் உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் அலுவல் சார்ந்த பணிகளிலும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணி செய்து வருகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு அவ்வப்போது உரிய அறிவிப்பு வெளியிட்டு ஆட்சேர்ப்பினை உச்ச நீதிமன்றம் நடத்தி வருகிறது.
அந்த வகையில், தற்போது உச்ச நீதிமன்றத்தில் 250 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பது எப்படி? என்ற விவரங்களை பார்க்கலாம். ஜூனியர் கோர்ட் அசிஸ்டண்ட் - 250 காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்து இருக்க வேண்டும். டைப்பிங் தெரிந்து இருப்பது அவசியம். கணினி இயக்கும் அறிவுடன் ஒரு நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அடிக்கும் திறன் பெற்று இருக்க வேண்டும் 01.07.2026 தேதிப்படி விண்ணப்பதாரர்கள் 18 வயதுக்கு குறையாமல் இருக்க வேண்டும். 30 வயதுக்கு மேல் இருப்பவர்களும் விண்ணப்பிக்க முடியாது. அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளுகு சலுகை உள்ளது. அதாவது வயது உச்ச வரம்பு சலுகைக்குள் இருப்பவர்கள் அதிகபட்ச வயது வரம்பை விட குறிப்பிட்ட ஆண்டுகள் கூடுதலாக வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும். மத்திய அரசின் 6-வது ஊதிய கமிஷன் படி மாதம் ரூ.35,400 +அலவன்ஸ்கள் வழங்கப்படும். கொள்குறி வகையில் எழுத்து தேர்வு நடைபெறும். ஜெனரல் அப்டிடியூட், பொது, அறிவு, உச்ச நீதிமன்ற விதிகள், கணினி அறிவு, ஆங்கில அறிவு தொடர்பான கேள்விகள் கேட்கப்படும். நேர்முகத்தேர்வும் உண்டு. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை ஆகிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். விண்ணப்ப கட்டணமாக ரூ.1,500செலுத்த வேண்டும். எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு ரூ.750 கட்டணம் ஆகும். விண்ணப்பிக்க வரும் 28.10.2026 கடைசி நாளாகும். தேர்வு அறிவிப்பை பார்க்க: https://cdnbbsr.s3waas.gov.in/s3ec0490f1f4972d133619a60c30f3559e/uploads/2026/09/2026093036.pdfபணியிடங்கள் விவரம்:
கல்வித் தகுதி
வயது வரம்பு:
சம்பளம் எவ்வளவு:
தேர்வு முறை:
தேர்வு மையங்கள்: