8ம் வகுப்பு, 10ம் வகுப்பு தகுதி அரசு வேலைகள்.. தமிழக வங்கி வழக்கில் உச்ச நீதிமன்றம் மேஜர் தீர்ப்பு


  • டெல்லி: தமிழ்நாட்டைச் சேர்ந்த பட்டதாரி ஒருவர், தற்காலிக வங்கி உதவியாளர் பணியை பெற்றிருந்தார். பின்னர் அவரை வங்கி நிர்வாகம் பணிநீக்கம் செய்தது. ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் அவரை மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிட்டது. ஆனால் வங்கி நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. அந்த மேல்முறையீட்டு மனுவினை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அசானுத்தின் அமானுல்லா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, குறைந்த கல்வித்தகுதி கொண்டவர்களுக்கான அரசு வேலைவாய்ப்பை அதிக கல்வித்தகுதி கொண்டவர்கள் பெற அனுமதிக்கக்கூடாது என்று தீர்ப்பளித்துள்ளது.

    Advertisement

    இன்றைக்கு 10ம் வகுப்பு தகுதி, 8ம் வகுப்பு தகுதி என்று அறிவிக்கப்படும் பல வேலைகளுக்கு பட்டதாரிகள், முதுகலைப்பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கிறார்கள். தூய்மை பணியாளர்கள், காவலாளிகள், சமையல் உதவியாளர்கள், உதவியாளர்கள் உள்பட பல்வேறு அடிப்படை பணியிடங்களுக்கு அரசு வேலை என்பதால், லட்சணக்கானோர் விண்ணப்பிக்கிறார்கள். அவர்களில் பலர் வேலையும் பெறுகிறார்கள்.

    Advertisement

    குறைந்த கல்வி தகுதி வேலை

    கடந்த சில ஆண்டுக்கு முன்பு உயர்நீதிமன்றம் வெளியிட்ட அலுவலக உதவியாளர் , துப்புரவுப் பணியாளர், வாட்ச்மேன் போன்ற மிக அடிப்படை வேலைகளுக்கு, குறைந்தபட்ச கல்வி தொகுதி கொண்ட வேலைகளுக்கு பட்டதாரிகள் எல்லாம் விண்ணப்பித்தார்கள். அப்போதே சென்னை உயர்நீதிமன்றம் நடவடிக்கை எடுத்து குறைந்த கல்வி தொகுதி கொண்டவர்களுக்கே முன்னுரிமை அளிக்க உத்தரவிட்டது.

    நீதிமன்றம் அனுமதிக்கவில்லை

    அதிகக் கல்வித்தகுதி உடையவர்கள், தங்களின் தகுதியைக் குறைத்துக் காட்டியோ அல்லது மறைத்தோ இந்த அடிப்படைப் பணிகளுக்குள் நுழைந்தால், அது உண்மையிலேயே எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு வேறு வேலைக்குச் செல்ல முடியாமல் இருக்கும் விளிம்புநிலை மக்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் செயலாகிவிடும் என்பதால் நீதிமன்றம் அனுமதிக்கவில்லை.

    Advertisement

    தமிழ்நாடு வழக்கு

    இந்த சூழலில் தமிழ்நாடு தொடர்பான வழக்கு டெல்லியில் நடந்தது. அதுபற்றி பார்ப்போம். தமிழ்நாட்டைச் சேர்ந்த பட்டதாரி ஒருவர், தற்காலிக வங்கி உதவியாளர் பணியை பெற்றிருந்தார். பின்னர் அவரை வங்கி நிர்வாகம் பணிநீக்கம் செய்துவிட்டது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவை ஏற்று வங்கி பணியில் மீண்டும் அமர்த்த நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    வங்கி நிர்வாகம் மேல்முறையீடு

    இந்த உத்தரவுக்கு எதிராக வங்கி நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள் அசானுத்தின் அமானுல்லா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, வங்கியின் உத்தரவை உறுதி செய்தது.

    Advertisement

    அரசுப்பணி யாருக்கு

    அப்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறும்போது, "சம்பந்தப்பட்ட நபர், தான் ஒரு பட்டதாரி என்ற உண்மையை மறைத்து, 10-ம் வகுப்பு கல்வித்தகுதி கொண்ட விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை பெற்றுள்ளார். இதை சென்னை ஐகோர்ட்டு கவனிக்க மறந்து விட்டது. நிர்ணயிக்கப்பட்ட கல்வித்தகுதிக்கு ஏற்ப தகுதியுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் அரசுப்பணி கிடைக்கச்செய்ய வேண்டும்.

    அதிக கல்வித்தகுதி இருந்தால் நிராகரிக்கலாம்

    குறைந்த கல்வித்தகுதி கொண்டவர்களுக்கான பணியை அதிக கல்வித்தகுதி கொண்டவர்கள் பெற அனுமதிப்பது, உண்மையிலேயே தகுதியான விண்ணப்பதாரரின் வாய்ப்பை தட்டி பறிப்பதாக அமைந்து விடும். கல்வித்தகுதிக்கு உச்சவரம்பு நிர்ணயிப்பது நியாயமானதுதான். வாழ்க்கை சூழ்நிலை காரணமாக, உயர்கல்வியை தொடர முடியாதவர்களுக்கு வாய்ப்பு அளிப்பதுதான் அதன் நோக்கம். அதிக கல்வித்தகுதி கொண்டவர்களுடன் போட்டியில் முடியாதவர்களுக்காக சில பணிகளை அரசு ஒதுக்கி உள்ளது. இத்தகைய கொள்கையை கோர்ட்டுகள் உறுதி செய்துள்ளன" இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

    English Summary

    Supreme Court delivers major verdict in the Tamil Nadu bank case regarding government jobs requiring 8th and 10th-grade qualifications.