தமிழக அரசு வேலைவாய்ப்பு.. பொதுப்பணித்துறையில் 760 பணியிடங்கள்.. யார் யார் விண்ணப்பிக்கலாம்?

  • சென்னை: தமிழக பொதுப்பணித்துறையில் (PWD) 2026-ஆம் ஆண்டிற்கான பயிற்சியாளர் (Apprentice) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. மொத்தம் 760 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பொறியியல் பட்டதாரிகள், டிப்ளமோ முடித்தவர்கள் மற்றும் கலை, அறிவியல், வணிகவியல் உள்ளிட்ட பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

    Advertisement

    தமிழக அரசு துறைகளில் பொதுப்பணித்துறை என்பது மிக முக்கியமான துறையாக உள்ளது. மாநிலம் முழுவதும் தமிழக அரசு கட்டிடங்களை கட்டுதல், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பணிகளை பொதுப்பணித்துறையே மேற்கொள்கிறது. இந்த துறையில் ஏற்படும் காலியிடங்கள் உரிய அரசு விதிகளை பின்பற்றி அவ்வப்போது நிரப்பப்படுகின்றன.

    Advertisement

    அதேபோல அப்ரெண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்களும் நிரப்பபடுகின்றன அந்த வகையில், தற்போது பயிற்சி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது பற்றிய விவரங்கள் பார்க்கலாம்.

    பணியிடங்கள் விவரம்:

    * சிவில் இன்ஜினியரிங் பட்டதாரிகள் - 360
    * மின்சாரம் மற்றும் மின்னணுவியல் பட்டதாரிகள் - 28
    * ஆர்க்கிடெக்சர் பட்டதாரிகள் - 12
    * சிவில் டிப்ளமோ பயிற்சியாளர்கள் - 150
    * மின்சாரம் மற்றும் மின்னணுவியல் டிப்ளமோ - 5
    * ஆர்க்கிடெக்சர் டிப்ளமோ - 5
    * கலை, அறிவியல், வணிகவியல் உள்ளிட்ட பட்டதாரிகள் - 200

    என மொத்தம் 760 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த பயிற்சி பணிகளின் காலம் ஒரு ஆண்டு ஆகும். இது நிரந்தர வேலை அல்ல; ஒரு ஆண்டு கால பயிற்சிப் பணியாகும். தேர்வு செய்யப்படும் நபர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியமர்த்தப்படுவார்கள்.

    Advertisement

    கல்வித் தகுதி:

    சம்பந்தப்பட்ட துறையில் முழுநேர பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும், BA, B.Sc., B.Com., BBA, BBM, BCA உள்ளிட்ட UGC அங்கீகாரம் பெற்ற பட்டப்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

    2022, 2023, 2024 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளில் படிப்பை முடித்த தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே இந்த பயிற்சியாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

    உதவித்தொகை:

    பட்டதாரி பயிற்சியாளர்கள் - மாதம் ரூ.9,000
    டிப்ளமோ பயிற்சியாளர்கள் - மாதம் ரூ.8,000
    பொறியியல் அல்லாத பட்டதாரிகள் - மாதம் ரூ.9,000

    தேர்வு முறை:

    விண்ணப்பதாரர்கள் மதிப்பெண் அடிப்படையில் முதலில் குறுந்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். பின்னர் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு இறுதி தேர்வு செய்யப்படும். பொதுப்பணித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://nats.education.gov.in/boat-srp.php மூலம் சமர்ப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பப் பதிவு 20.05.2026 அன்று தொடங்கி, 25.06.2026 அன்றுடன் நிறைவடைகிறது.

    Advertisement

    முக்கிய தேதிகள்:

    விண்ணப்பம் தொடங்கும் நாள் - 20.05.2026
    விண்ணப்பிக்க கடைசி நாள் - 25.06.2026
    குறுந்தேர்வு பட்டியல் வெளியீடு - 03.07.2026
    சான்றிதழ் சரிபார்ப்பு - 15.07.2026 முதல் 17.07.2026 வரை (தற்காலிகம் தான்).

    தேர்வு அறிவிப்பினை படிக்க: https://nats.education.gov.in/uploads/events/sr/Public%20Works%20Department,%20Chepauk%20-%20Notification%202026-27.pdf

    English Summary

    Tamil Nadu PWD has invited applications for 760 Apprentice posts under its 2026 recruitment drive. Engineering graduates, diploma holders and non-engineering graduates are eligible to apply. The apprenticeship training will be for one year and applications can be submitted online.